முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் – பிரதமர் , ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து..!

அரசியல்இந்தியா

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் – பிரதமர் , ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து..!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்  – பிரதமர் , ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து..!

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!”என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு: “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைத்திடவும், மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிடவும் வாழ்த்துகிறேன்.

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்: “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, நாட்டிற்கு சேவையாற்றிட மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை கிடைத்திட வாழ்த்துகிறேன். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அமித்ஷாவிற்கு முதல்-அமைச்சர் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

Leave your comments here...