சாகர்மாலா திட்டத்தின்கீழ் புதுச்சேரி-சென்னை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம்..!

தமிழகம்

சாகர்மாலா திட்டத்தின்கீழ் புதுச்சேரி-சென்னை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம்..!

சாகர்மாலா திட்டத்தின்கீழ்  புதுச்சேரி-சென்னை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம்..!

சென்னை மற்றும் புதுச்சேரி துறைமுகங்களுக்கு இடையே கடல்வழி சரக்கு கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கியது. இதன் மூலம் சென்னை துறைமுகத்தின் துணை துறைமுகமாக புதுச்சேரி துறைமுகம் செயல்படத் தொடங்கியது.

சென்னையில் செயல்பட்டு வரும் பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கு தேவையானவற்றை கொண்டு வருவதற்கும், சென்னையில் இருந்து பிற இடங்களுக்கு பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் தரைவழிப் போக்குவரத்து பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது . அந்த வகையில் சென்னையிலிருந்து திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் சாலைகள் எப்போதும் போக்குவரத்து நெரிசலாகவே காணப்படுவதால், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு சரக்கு கப்பல் சேவை வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்ட்டது.

அதனை ஏற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து சரக்கு போக்குவரத்தை தொடங்க சென்னை எண்ணூர் துறைமுகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.தொடர்ந்து சாகர்மாலா திட்டத்தின்கீழ் புதிய துறைமுகத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று முடிந்தது. இதனைத்தொடர்ந்து இரு வாரத்திற்கு முன்பு சிறிய ரக சரக்கு கப்பலானது வெள்ளோட்டமாக புதுச்சேரி துறைமுகத்துக்கு வந்தது, அந்த கப்பல் புதிய துறைமுகத்தில் நிறுத்தி வைத்து கண்டெய்னர்கள் கையாள்வது குறித்து ஆய்வு மேற்கொண்டது.

இதனைத்தொடர்ந்து சரக்கு கப்பல் புதுச்சேரியில் இருந்து இன்று சென்னை புறப்பட்டது. அங்கிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு வரும் 28-ந்தேதி புதுச்சேரி திரும்ப உள்ளது. வாரத்தில் 2 நாட்கள் சென்னை-புதுச்சேரி இடையே சரக்கு கப்பலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தின் துணை துறைமுகமாக புதுச்சேரி துறைமுகம் இன்று முதல் செயல்படத் தொடங்கியது. மேலும் இந்த சரக்கு கப்பல் சேவையால் நேரமும், பணமும் மிச்சமாவதோடு, சுற்றுச்சுழலும் பாதுகாக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Leave your comments here...