பிளாஸ்டிக் பைகளுக்கு மக்கள் பை..பை.. சொல்ல வேண்டும் – மான் கி பாத் பிரதமர் மோடி உரை..!

இந்தியா

பிளாஸ்டிக் பைகளுக்கு மக்கள் பை..பை.. சொல்ல வேண்டும் – மான் கி பாத் பிரதமர் மோடி உரை..!

பிளாஸ்டிக் பைகளுக்கு மக்கள் பை..பை.. சொல்ல வேண்டும் – மான் கி பாத் பிரதமர் மோடி  உரை..!

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் மனதின் குரல் (மான் கி பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாடி வருகிறார். இன்று 98-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:- உங்கள் மனதின் ஆற்றலை நீங்கள் அறிவீர்கள். அதேபோல் சமூகத்தின் சக்தியுடன் நாட்டின் சக்தி எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை மான் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பார்த்தோம். புரிந்து கொண்டோம், அனுபவித்தோம். சர்தார்பட்டேலின் பிறந்தநாளான ஒற்றுமை நாள் அன்று மான் கி பாத் நிகழ்ச்சியில் தேச பக்தி பாடல்கள், தாலாட்டு மற்றும் ரங்கோலி ஆகிய போட்டிகளை பற்றி பேசினோம். இதில் நாடு முழுவதிலும் உள்ள 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் முதியோர் ஆர்வத்துடன் பங்கேற்று 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் அனுப்பப்பட்டன. தாலாட்டு போட்டியில் முதல் பரிசை கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் வென்றுள்ளார். 2-வது பரிசை அசாமின் கம்ரூப் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் கோவாலா வென்றார். ரங்கோலி போட்டியில் முதல் பரிசை வென்ற பஞ்சாப்பை சேர்ந்த கமல் குமார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பகத் சிங் ஆகியோர் முழு ரங்கோலியை உருவாக்கினர். மகாராஷ்டிராவை சேர்ந்த சச்சின் நரேந்திர அவ்சாரி, கோவாவை சேர்ந்த குருதத் வந்தேகர் காந்தி ஆகியோரும் வென்றுள்ளனர்.

புதுச்சேரியை சேர்ந்த மாலதி செல்வம் பல சிறந்த சுதந்திர போராட்ட வீரர்களின் ரங்கோலியை அனுப்பி உள்ளார். தேச பக்தி பாடல் போட்டியில் ஆந்திராவை சேர்ந்த விஜயதுர்கா வெற்றி பெற்றார். சில நாட்களுக்கு முன் இசை மற்றும் கலைத்துறையில் வளர்ந்து வரும் திறமையான கலைஞர்களுக்கு உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரங்கார் வழங்கப்பட்டுள்ளது. இதில் வி.துர்கா தேவி பண்டைய நடனமான கரகாட்டத்துக்காக வென்றுள்ளார். கால அவகாசம் காரணமாக விருதுபெற்ற அனைவரையும் பற்றி இங்கு பேச முடியாமல் போகலாம். ஆனால் அவர்களை பற்றி கண்டிப்பாக படிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

டிஜிட்டல் இந்தியாவின் சக்தியை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்து செல்வதில் பல்வேறு செயலிகள் பெரும் பங்குவகிக்கின்றன. அது போன்ற ஒரு செயலி இ-சஞ்சீவனி. சுகாதாரத்துறையின் இ-சஞ்சீவனி திட்டம், டிஜிட்டல் இந்தியாவில் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது. இத்திட்டம் மூலம் இதுவரை 10 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். ஏழை மக்களுக்கு உயிர் காக்கும் செயலியாக இ-சஞ்சீவனி மாறி உள்ளது. மக்கள் உறுதியாக இருந்தால் இந்தியாவை நிச்சயம் தூய்மைப்படுத்த முடியும்.

ஒவ்வொருவரும் பிளாஸ்டிக் பைகளை மாற்றி துணி பைகளை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு பொதுமக்கள் (பை…பை) சொல்ல வேண்டும். மக்களின் இந்த முயற்சி எவ்வளவு திருப்தி தரும் என்பதை ஒவ்வொரு வரும் உணறும் காலம் வரும். ஒரு நாட்டில் அழிந்து கொண்டிருக்கும் ஒருவகை பறவை, ஒரு உயிரினம் காப்பாற்றப்பட்டது. அது உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது. இப்படி பல பாரம்பரியங்கள் நம் நாட்டில் மறைந்து மக்கள் மனதில் இருந்தும், இதயங்களில் இருந்தும் அழிந்து போயிருந்த போதிலும் இப்போது மக்கள் பங்கேற்ற சக்தியுடன் அவற்றை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஹோலி பண்டிகை சில நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. இதை உள்ளூருக்கான குரல் என்று உறுதியுடன் நாம் விழாவை கொண்டாட வேண்டும். பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்பதற்கு திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

Leave your comments here...