திருப்பதி தரிசன முறையில் மாற்றம் – மார்ச் 1 முதல் முகத்தை அடையாளம் காணும் முறை அறிமுகம்..!

ஆன்மிகம்

திருப்பதி தரிசன முறையில் மாற்றம் – மார்ச் 1 முதல் முகத்தை அடையாளம் காணும் முறை அறிமுகம்..!

திருப்பதி தரிசன முறையில் மாற்றம் – மார்ச் 1 முதல் முகத்தை அடையாளம் காணும் முறை அறிமுகம்..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களை அடையாளம் காண்பதற்காக, மார்ச் 1 ஆம் தேதி முதல் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை சோதனை முறையில் அமல்படுத்த இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர், இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள், லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்கிச் செல்கின்றனர்.இதனைத் தடுக்க தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் லட்டு பிரசாதம் வாங்குவது, தங்கும் அறைகளை பெறுவது ஆகியவற்றுக்காக கவுண்டர்களுக்கு செல்பவர்கள் அந்த வாரத்தில் எத்தனை முறை வந்துள்ளனர் என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

மேலும், இந்த தொழில்நுட்பத்தை வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதன் பின்னர் நிரந்தரமாக அமலுக்கு கொண்டு வருவது குறித்து முடிவு செய்யப்படும். ஒரு பக்தர் அதிக டோக்கன்கள் வாங்குவதைத் தடுப்பதற்காக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்பட இருப்பதாகவும், “இலவச தரிசனம் மற்றும் தங்குமிட ஒதுக்கீடு முறைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவது, வருகை தரும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ள சேவைகளை வழங்குவதாகும்” என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...