ஹிண்டன்பர்க் அறிக்கை – டாப் 25 நிறுவனங்களின் பட்டியலில் இருந்து அதானி வெளியேற்றம்..!

இந்தியா

ஹிண்டன்பர்க் அறிக்கை – டாப் 25 நிறுவனங்களின் பட்டியலில் இருந்து அதானி வெளியேற்றம்..!

ஹிண்டன்பர்க் அறிக்கை – டாப் 25 நிறுவனங்களின் பட்டியலில் இருந்து அதானி வெளியேற்றம்..!

அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் முறைகேடு அறிக்கை எதிரொலியாக அதானி குழுமத்தின் பங்குகள் ஒரே மாதத்தில் 11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மதிப்பை இழந்துள்ளன. அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களின் பங்குகள் இன்றும் சரிவிலேயே உள்ளன. குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவன பங்கு மதிப்பு அதிகபட்சமாக 7 விழுக்காடு அளவுக்கு சரிந்தது.

அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி பவர் ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு சராசரியாக 5 சதவீதம் சரிந்துள்ளது. அதானி போர்ட் நிறுவன பங்கு மதிப்பு 3 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

குறிப்பாக டாப் 25 நிறுவனங்களின் பட்டியலில் இருந்து அதானி குழுமத்தின் நிறுவனங்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டுள்ளன. அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி வில்மர், அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி லிமிடெட் ஆகிய பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 11 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பை இழந்துள்ளன. செலவீனங்களை குறைத்து கடன்களை திருப்பி செலுத்திய போதிலும், அதானி குழுமத்தின் நடவடிக்கை முதலீட்டாளர்களிடம் போதிய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

இதனால் பங்குகளை விற்பனை செய்யும் போக்கு தொடர்ந்து சந்தையில் அதிகரித்து வருகிறது. அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு நேற்றைய நிலவரப்படி 100 மில்லியன் டாலர்களுக்கும் கீழ் அதாவது இந்திய மதிப்பீட்டில் 8.20 லட்சம் கோடி ரூபாய்க்கும் கீழ் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பங்கு மதிப்பு சரிவு எதிரொலியாக கெளதம் அதானியின் சொத்து மதிப்பும் சரிந்துவிட்டதால் உலக செல்வந்தர்களின் பட்டியலில் முன்னணியில் இருந்த கெளதம் அதானி, தற்போது 27வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Leave your comments here...