சத்ரபதி சிவாஜியின் படம் சேதம் – டெல்லியில் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல்..!

இந்தியா

சத்ரபதி சிவாஜியின் படம் சேதம் – டெல்லியில் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல்..!

சத்ரபதி சிவாஜியின் படம் சேதம் – டெல்லியில் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல்..!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ.,வில்) சத்ரபதி சிவாஜியின் புகைப்படத்தை சேதப்படுத்தியதாக கூறி ஏபிவிபி அமைப்பினர் தமிழக மாணவர்களிடம் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பையில் ஐஐடி.,யில் 18 வயது தலித் மாணவர் தர்ஷன் சொலான்கி கடந்த 12ம் தேதி விடுதியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதியில் சொலான்கியுடன் அறையில் தங்கி இருந்த மற்ற மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஐஐடி வளாகங்களில் தலித், இஸ்லாமியர் உள்ளிட்ட சமுதாயங்களை சேர்ந்த மாணவர்கள் மர்மமான முறையில் இறப்பதற்கு பின்னணியில் சாதி, மத ஒடுக்குமுறை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில்தான் சொலான்கி மரணத்துக்கு நீதிகோரி, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள் போராடி இருக்கிறார்கள்.

இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் உள்ளிட்டோரின் புகைப்படங்களுடன் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் பல்கலை வளாகத்தில் உள்ள சத்ரபதி சிவாஜியின் திருவுருவப்படம் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் உட்பட பலர் படுகாயமடைந்தனர். ஒருசிலருக்கு மண்டை உடைந்து ரத்தக்காயங்களும் ஏற்பட்டது. அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அப்போதும் விடாத ஏ.பி.வி.பி அமைப்பினர் ஆம்புலன்சையும் தடுத்து நிறுத்தி மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Leave your comments here...