JANANESAN EXCLUSIVE : பல கோடிகளை சுருட்டிய நகராட்சி நகரமைப்பு அலுவலர் – அதிரடி மாற்றத்தின் பின்னணி என்ன..?..?

சமூக நலன்தமிழகம்

JANANESAN EXCLUSIVE : பல கோடிகளை சுருட்டிய நகராட்சி நகரமைப்பு அலுவலர் – அதிரடி மாற்றத்தின் பின்னணி என்ன..?..?

JANANESAN EXCLUSIVE : பல கோடிகளை சுருட்டிய நகராட்சி நகரமைப்பு அலுவலர் – அதிரடி மாற்றத்தின் பின்னணி என்ன..?..?

திருவேற்காடு நகராட்சியில் நகரமைப்பு அலுவலராக இருந்தவர் நாகராஜ். இவர் மீது பல்வேறு ஊழல் புகார்களும் கிச்சனுக்கு ரூ.40 ஆயிரம் வாங்கி அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் கணக்கை காட்டுவதாலும் தொடர்ந்து புகார் வந்த காரணத்தால் நகராட்சி நிர்வாக ஆணையரகம் இவரை பணி நீக்கம் செய்வதற்கு பதிலக அதிரடியாக குளச்சல் நகராட்சியில் அதிரடியாக மாற்றம் செய்துள்ளது.

இதன் பின்னணி விவரங்கள் வருமாறு:- ராமநாதபுரத்தில் கப்பல் உடைக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து சட்டத்திற்கு புறம்பாக பாண்டே (G.O)ஜீ.ஓ மூலமாக தின கூலி பணியில் நகரமைப்பு பணியில் சேர்ந்து தற்போது திருவேற்காடு நகராட்சியில் டி.பி.ஒ ஆக இருப்பவர் நாகராஜ் . இவர் ஏற்கனவே கடந்த ஆட்சியில் துறையூர், திருவெற்றியூர், பூந்தமல்லி, பம்மல் ஆலந்தூர், பல்லவரம், அம்பத்தூர், தாம்பரம் ஆகிய நகராட்சிகளில் டி.பி.ஐ. ஆக இருந்து பல கோடிகளை சுருட்டியவர். இவர் வேலை செய்த பல நகராட்சிகளில் கட்டிட அனுமதி கொடுத்த விவகாரத்தில் லஞ்சஒழிப்பிடம் வசமாக மாட்டியவர். தணிக்கை துறையினரால் குற்றம்சாட்டபட்ட பல்வேறு வழக்குகளை கடந்த ஆட்சியில் உள்ள உள்ளாட்சி அமைச்சரின் உதவியாளர் பார்த்தீபனிடம் பல லட்சங்களை லஞ்சமாக கொடுத்து சி.எம்.ஏ (CMA)ஆக இருந்த பிரகாசுக்கும் கணிசமான தொகையை கொடுத்து சீனியர்களை ஓவர் லுக் செய்து கள்ளத்தனமாக நகரமைப்பு அலுவலராக பதவி உயர்வு பெற்று பம்மல் நகராட்சிக்கு வந்தவர். தான் ஒரு அசைக்க முடியாத அதிபர் போல் கோடி,கோடியாக கொள்ளை அடித்த லஞ்ச பணத்தில் சொத்துக்களை வாங்கி குவித்து தலைக்கனத்தின் உச்சத்தில் ஆனார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல் நிதிகளையும் அதிமுகவுக்கு வசூல் செய்து கொடுத்தார் . மீண்டும் அதிமுக தான் ஆட்சிக்கு வரும் கனவு நாகராஜிக்கு தவிடு பொடியானது. மக்களின் பேராதரவுடன் திமுக மகத்தான ஆட்சி அமைத்தன ஊழலிலேய புரண்டு ஊழலியே குழித்து பில்டர்களாக வலம் வந்த நகரமைப்பு அதிகாரிகள் அதிரடியாக தூக்கி எறியப்பட்டனர். இதனால் திமுக அரசின் தன் மானம் காப்பாற்றப்பட்டது. ஆடிய கையும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல இருந்த நாகராஜ் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரிடம் சென்று மண்டியிட்டு நடையாய் நடந்து பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டு திருவேற்காடு நகராட்சியில் டி.பி.ஓ ஆக வந்தார்.

இந்த சம்பவம் செங்கல்பட்டு மண்டலத்தில் இருந்து மாற்றப்பட்ட பிற நகரமைப்பு ஆய்வாளர்களும் , நகரமைப்பு அலுவலர்களும் பிரமித்து போனார்கள். நகராஜ் டி.பி.ஒ எப்படி திருவேற்காடு நகராட்சிக்கு டி.பி.ஓ ஆக வந்தார் என்று…? இந்த டி.பி.ஒ வும் லஞ்சஒழிப்புதுறையிடம் சிக்கி பணிகளை இழந்த சில நகரமைப்பு கறுப்பாடுகளும் கூட்டு சேர்ந்து அம்பத்தூரில் லைசன்ஸ் சர்வேயர் ஒருவரின் அலுவலகத்தில் வைத்து திருவேற்காடு நகராட்சியில் கட்டிட அனுமதி கேட்டு வரும் சட்ட விதிகளை மீறி வரும் பையில்களை வைத்து உள்ளூர் அமைச்சருக்கே தெரியாமல் நகராட்சி ஆணையரிடம் நிலமையை எடுத்து கூறாமல் அவரையும் ஏமாற்றி கை எழுத்தை வாங்கி செமத்தியாக சுருட்டபட்டன. இந்த சுருட்டல்கள் குறித்து சில ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டன. நகர்புற அமைச்சரின் உதவியாளர் ஒருவர் மூலமாக இந்த பித்தலாட்டங்களை மூடி மறைக்கபட்டன. இந்த பண ருசி யாரை விட்டது என்பது போல் ஆறு ஏரி குழம், வாய்க்கால் போன்ற வற்றுக்கும் அனுமதி கொடுக்கலாம் என்று நூற்றுக்கும் மேற்ப்பட்ட பையில்கள் தேங்கலாயின… காரணம் பல்லாவரத்தில் இருந்து டி.பி.ஐ ஒருவரை திருவேற்காடு நகராட்சியில் இன்சார்ச்சாக நியமித்தனர்.

அந்த டிபிஐ.யோ ஆகா….ஆஹா….. இந்த பயில்கள் டுபாக்கூர் பையில்கள்… இதில கை எழுத்து போட்டா வெல்லம் சாப்பிடுறவன் ஒருத்தன், விரலு சூப்பிறவன் நானாகி விடக்கூடாது என்பதால் திருவேற்காடு நகராட்சி பக்கமே போகாமல் இருந்தார். இந்த நிலமையில் தான் சட்ட விதிகளை மீறிய பயில்களுக்கு பார்ட்டியிடம் பல லட்சங்களை லஞ்சமாக கொடுத்தவர்கள் டி.பி.ஒ.வுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். அதில் இருந்து தப்பிக்க டி.பி.ஐ இன்று வருவார், நாளை வருவார்..! என்று நாளை கடத்திய நகராஜன் டி.பி.ஓ. பணம் ஒன்றே பிரதானமாக இருந்து பணம் கொடுப்பவர்களின் பையில்களை மட்டும் தனியாக பார்க்க ஆணையருக்கு தெரியாமல் இரண்டு பணியாளர்களை தன்னிச்சையாக வைத்திருந்தார். இந்த அறையில் புதியதாக யார் வந்தாலும் டி.பி.ஓ. நாகராஜின் அந்த உதவியாள் டென்சனாகி விடுவார். குறிப்பாக செய்தியாளர்கள் யாராவது இவரை பார்க்க போனால் ஆணையர் கூப்பிடுகிறார் என்று பாத்ரூமில் சென்று இவரது எடுபிடிகளிடம் அந்த ரூமில் இருக்காதே அங்க நிக்கிறது வில்லங்கம் பார்ட்டி செல் போணில் போட்டா எடுத்திடுவான் என்று அலாட்டாக இருக்க வைக்கும் பழக்கம் தினசரி அந்த அலுவலக அறையில் பார்க்கலாம். பையில் பார்க்க ஒரு ஆள் ரேட்டு பேசி லஞ்சம் வாங்க ஒரு ஆள் , இப்படி வாங்கி, வாங்கி உள்ளூர் அமைச்சருக்கே அல்வா கொடுத்தது தான் சிரப்பாக உள்ளது. பல நாள் திருடன் ஒரு நாள் கிடைப்பான் என்பது போல வசமாக சிக்கிய டிபிஒ. நாகராஜ் அதிரடியாக குளச்சல் நகராட்சிக்கு மாற்றபட்டு டம்மியாக்கபட்டார்.

திருவேற்காடு நகராட்சியில் டி.பி.ஓ ஆக இருந்த நாகராஜன் கை எழுத்திட்ட அனைத்து பையில்களையும் நகராட்சி நிர்வாக ஆணையர் சிறப்பு டீமை நியமித்து ஆய்வு செய்யவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகும். இந்த நகராட்சியில் கட்டிட அனுமதி பெற எப்பேர் பட்ட பெரிய ஆளாக இருந்தாலும். கட்டிட அனுமதி பெற லஞ்சம் வாங்காமல் கட்டிட அனுமதி வாங்க முடியாது என்பதை ஆளும் கட்சி காரர்களே புலம்புகிறார்கள். இந்த நகராட்சியில் வருவாய் பிரிவிலும் ஊழல் மலிந்து. கோடி, கோடியாக கொள்ளை அடித்த வரித்தண்டலரும் நிழல் ஆணையருமான முத்துராஜ் செய்த பல கோடிகளை முறைகேடு செய்த புகாரினால் அதிரடியாக நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த வரி தண்டலர் இந்த நகராட்சியில் உள்ள உயர் அதிகாரி ஒருவருக்கு ஒரு கோடி மதிப்பீட்டில் வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஊழல் பேர்வழியான முத்துராஜிக்கு நல்லவர் என தர சான்றிதழ் கொடுத்தது இந்நகராட்சி ஆணையராகும்.. வரி தண்டலர் ஒருவர் நிழல் ஆணையராக வலம்வருவது தான் வேடிக்கையாக உள்ளது. கத்திரிக்காய் முத்தினா கடை தெருவிற்கு வந்து தானே ஆகணும். ஊடகம் என்பது காலத்தின் கண்ணாடி, அந்த கண்ணாடியை சில ஊழல் வாதிகள் தான் தப்பிக்க எதையாவது தள்ளி விட்டு ஏமாற்றுவது பூனை கண்ணை மூடினால். உலகமே இருண்டு விட்டது என்று நினைப்பவர்களுக்கு இந்த செய்தியே ஒரு சாட்சி… உண்மை கசக்கும் ஊழல் வாதிகள் தேச துரோகிளுக்கு சமம். லஞ்ச பணத்தை வாங்கி அதில் மஞ்சா குழிப்பவர்களுக்கு இந்த செய்தி அர்பணம்…!

செய்திபிரிவு

Leave your comments here...