காஷ்மீரில் பெருமளவிலான லித்தியம் கண்டுபிடிப்பு – உலகில் 2வது பெரிய நாடாக மாறப்போகும் இந்தியா!

இந்தியா

காஷ்மீரில் பெருமளவிலான லித்தியம் கண்டுபிடிப்பு – உலகில் 2வது பெரிய நாடாக மாறப்போகும் இந்தியா!

காஷ்மீரில் பெருமளவிலான  லித்தியம் கண்டுபிடிப்பு – உலகில் 2வது பெரிய நாடாக மாறப்போகும் இந்தியா!

மின்சார வாகனங்கள், சூரியசக்தி மின்தகடுகள் தயாரிப்பில் பயன்படும் மிக முக்கிய தாதுப்பொருளாக லித்தியம் உள்ளது. இதில் நூறு சதவீதம் இறக்குமதியை சார்ந்தே இந்தியா இருக்கிறது.

இந்நிலையில், சிறந்த தரத்திலான, பெருமளவிலான லித்தியம் படிவு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள ரியாசி மாவட்டத்தில், வைஷ்ணவி தேவி கோவில் மலை அடிவாரத்தில் சலால் என்ற கிராமப்பகுதியில் இந்த லித்தியம் படிவுகளை இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அங்கு சுமார் 60 லட்சம் டன் லித்தியம் படிவு புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக புவியியல் ஆய்வு நிறுவன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், லித்தியம் கிடைக்கும் உலகின் குறிப்பிட்ட சில நாடுகள் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. பிரதமர் மோடியின் சுயசார்பு இந்தியா திட்டத்துக்கு இது உதவிசெய்யும் என அவர்கள் கூறினர். தற்போது சீனாவின் லித்தியம் இருப்பையும் இந்தியா தாண்டிவிடும் என்று அந்த அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் இரண்டுகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு லித்தியம் தாதுப்பொருளை வெட்டி எடுக்கும் பணி தொடங்கும் என புவியியல் ஆய்வு நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. லித்தியம் படிவு கண்டுபிடிப்பு குறித்து சலால் கிராம மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். இதனால் உள்ளூர் வாலிபர்கள் உள்ளிட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உலகில் 2வது இடம் பிடிக்கும் இந்தியா இதனால் தான் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள லித்தியத்தின் அளவு என்பது உண்மையில் மிகவும் பெரிய அளவு என கூறப்படுகிறது. உதாரணங்களுடன் கூறினால் இன்னும் எளிதாக புரியும். அதாவது உலகில் லித்தியத்தை அதிமகம் வைத்துள்ள நாடாக சிலி உள்ளது. சிலி நாட்டில் 9.2 மில்லியன் டன் லித்தியம் கையிருப்பில் உள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா 5.7 மில்லியன் டன்னுடன் 2வது இடத்திலும், சீனா 1.5 மில்லியன் டன்னுடன் 3வது இடத்திலும், பிரேசில் 95,000 கிலோவுடன் 5வது இடத்திலும், போர்ச்சுக்கல் 66,000 கிலோவுடன் 6வது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் தான் தற்போது இந்தியாவில் ஜம்மு காஷ்மீரில் மட்டும் 5.9 மில்லியன் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகத்திலேயே லித்தியம் இருப்பில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவாக உள்ளது.

Leave your comments here...