விவசாயி வீட்டில் பதுங்கியிருந்த நல்லபாம்பு – மீட்ட தீயணைப்பு வீரர்கள்.!

தமிழகம்

விவசாயி வீட்டில் பதுங்கியிருந்த நல்லபாம்பு – மீட்ட தீயணைப்பு வீரர்கள்.!

விவசாயி வீட்டில் பதுங்கியிருந்த நல்லபாம்பு – மீட்ட தீயணைப்பு வீரர்கள்.!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள, வேட்டைபெருமாள்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (40). இவர் விவசாயம் செய்து வருகிறார். தனது தோட்டத்தில் நெல் விவசாயம் செய்து வந்த பாலசுப்பிரமணியன், அறுவடையான நெல் மணிகளை பிளாஸ்டிக் ட்ரம்ப்களில் போட்டு வீட்டில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் பாலசுப்பிரமணியனின் மனைவி ஜோதி (35), வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது நெல்மணிகள் போட்டு வைத்திருந்த ட்ரம்பில் இருந்து, கயிறு போன்று நீளமாக ஒன்று அசைவதைப் பார்த்து பயந்து போனார். உடனடியாக இது குறித்து ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நெல்மணிகள் போட்டு வைத்திருந்த ட்ரம்பின் மூடியை திறந்தனர்.

அதில் சுமார் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று இருந்ததை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவியின் மூலம், நெல் மணியில் பதுங்கியிருந்த நல்லபாம்பை உயிருடன் மீட்டு, மேற்கு தொடர்ச்சிமலை காட்டுப் பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.

Leave your comments here...