தமிழ்நாடு – ஆந்திரா இடையே புதிய 6 வழிச்சாலை – மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி.!

தமிழகம்

தமிழ்நாடு – ஆந்திரா இடையே புதிய 6 வழிச்சாலை – மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி.!

தமிழ்நாடு – ஆந்திரா இடையே புதிய 6 வழிச்சாலை – மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி.!

தமிழ்நாடு – ஆந்திரா இடையே புதிய 6 வழிச்சாலைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரையிலான 126 கி.மீ. தொலைவுள்ள 6 வழிச்சாலைக்கு மத்திய அமைச்சகம் உத்தரவு வழங்கியுள்ளது.

இந்தச் சாலையானது ஆந்திராவில் 82 கிலோமீட்டரும் தமிழ்நாட்டில் 44 கிலோ மீட்டர் தூரத்திற்கும், அமைக்கப்பட இருக்கிறது. சென்னை – பெங்களூரு விரைவுச் சாலையை ஆந்திர மாநில சித்தூருடன் இணைக்கும் வகையில் புதிய 6 வழிச்சாலை அமைக்கப்படுகிறது அதற்கான திட்டங்கள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. மத்திய அரசின் பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரூ.3840 கோடி மதிப்பீட்டில் இந்த 6 வழிச்சாலை அமையவுள்ளது. புதியா சாலை அமைக்க 850 ஹேக்டேர் நிலம் கையகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 309 ஹெக்டேர் நிலமும், ஆந்திராவில் 541 ஹக்டேர் நிலமும் இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய ஆறுவழிச்சாலையின் மூலம் 10 பெரிய பாலங்கள், 33 சிறிய பாலங்கள் கட்டப்படும் என்றும், 100 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்கள் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலைக்காக, திருவள்ளூர் மாவட்டம் புலிக்குன்றம் காப்புக்காட்டில், 86 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...