24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை – அனைத்து கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

சமூக நலன்தமிழகம்

24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை – அனைத்து கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை –  அனைத்து கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம் அருகே, எஸ். ராமலிங்காபுரத்தில் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை கண்டித்து, பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே எஸ் ராமலிங்கபுரம் கிராமத்தில் , கடந்த 2018 ம் ஆண்டு அரசு சார்பில் டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட்டது. பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், டாஸ்மாக் கடை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ராமலிங்கபுரம் கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடையை திறக்க வருவாய்துறை தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் , தங்கள் பகுதியில் சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு நாள் முழுவதும் மது விற்பனை செய்யப்படுவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, குற்றச்சாட்டி இன்று பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், பெண்கள் மற்றும் அனைத்து கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தங்கள் பகுதியில் நடைபெறும் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கவும், மது விற்பனையை தடுக்க மறுக்கும் காவல்துறையை கண்டித்தும், புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு முயற்சி நடப்பதை கண்டித்தும் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave your comments here...