விபத்தில் உயிரிழந்த பாஜக நிர்வாகி வீட்டில், அண்ணாமலை அஞ்சலி..!

தமிழகம்

விபத்தில் உயிரிழந்த பாஜக நிர்வாகி வீட்டில், அண்ணாமலை அஞ்சலி..!

விபத்தில் உயிரிழந்த பாஜக நிர்வாகி வீட்டில், அண்ணாமலை அஞ்சலி..!

மதுரையில், சாலை விபத்தில் உயிரிழந்த பாஜக நிர்வாகி இல்லத்துக்கு சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை, செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்

திருப்பரங்குன்றம் அருகில் உள்ள சீனிவாசா காலணி மகாலெட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் கே.டி ஹரிராம் இவர் பா.ஜ.க. நெசவாளர் அணியில் மாவட்டத் தலைவராக பதவி வகித்தவர். இவரது மனைவி சித்ரா மகள்கள் நாக நந்தினி பிரியதர்சினி.

இந்த நிலையில் ஹரிராம் கடந்த நவம்பர் மாதம் காந்தி கிராம பட்டமளிப்பு விழாவில் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, மீண்டும் திருநகருக்கு திரும்பிய போது, நாகமலை புதுக்கோட்டை அருகில் நான்கு வழிச்சாலையில் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று பா.ஜ. க. மாநிலத் தலைவர் அண்ணாமலை திருநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்து அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி அவரது உருவ படத்திற்கு மாலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது மனைவியிடம் ரூ.2 லட்சம் நிதி வழங்கினார். அவரது குடும்பத்தினர் சார்பாக அண்ணாமலையிடம் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். நிர்வாகிகள் கதலி நரசிங்கபெருமாள், சசிகுமார், கே.பி.வேல்முருகன், வெற்றிவேல்முருகன், வக்கில் பாலா ஆகியோர் உடன் இருந்தனர்

Leave your comments here...