கங்கை ஆற்றுப்படுகையில் கழிவு நீரை அகற்றும் திட்டத்திற்கு ரூ.2,700 கோடி ஒதுக்கீடு..!

இந்தியா

கங்கை ஆற்றுப்படுகையில் கழிவு நீரை அகற்றும் திட்டத்திற்கு ரூ.2,700 கோடி ஒதுக்கீடு..!

கங்கை ஆற்றுப்படுகையில் கழிவு நீரை அகற்றும் திட்டத்திற்கு ரூ.2,700 கோடி ஒதுக்கீடு..!

உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள கங்கை ஆற்றுப் படுகையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக கங்கை தூய்மை தேசிய இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் 46-வது செயற்குழு கூட்டம் தலைமை இயக்குநர் ஜி அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் ரூ 2,700 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் கங்கை படுகையில் கழிவு நீரை அகற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான 12 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி உத்தரப்பிரதேசத்தில் 3 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில் பிரயாக்ராஜில் மட்டும் ரூ. 475.19 கோடி செலவில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல் பீகாரின் தௌத் நகரிலும், ரூ. 42.25 கோடி செலவிலும், மோத்திகரில் 149.15 கோடி செலவிலும் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் ரூ. 653.67 கோடி செலவில் ஆதிகங்கா ஆற்றின் மறுசீரமைப்பு திட்டத்தற்கும் இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...