பழனி கோவிலில் தைப்பூச திருவிழா – ஜனவரி 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் ..!

ஆன்மிகம்

பழனி கோவிலில் தைப்பூச திருவிழா – ஜனவரி 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் ..!

பழனி கோவிலில் தைப்பூச திருவிழா  – ஜனவரி 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் ..!

தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு கோவிலுக்கு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் 2023-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அடிப்படை வசதிகள் குறித்து கோவில் நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முக்கிய நிகழ்வான தைப்பூசத்தின்போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேதமாக முத்துக்குமாரசாமி தந்த பல்லக்கு, வெள்ளி ஆட்டுகிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் பிப்ரவரி 3-ந்தேதி இரவு 7 மணிக்குமேல் 8 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு மேல் வெள்ளி ரதத்தில் வள்ளி-தெய்வானை சமேதமாக முத்துகுமாரசாமி உலாவரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. முத்திரை நிகழ்ச்சியான தைப்பூச திருத்தேரோட்டம் 4-ந்தேதி நடக்கிறது. வழக்கமாக தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் டிசம்பர் மாத இறுதியில் இருந்தே வரத்தொடங்கி விடுவார்கள்.

மேலும் பொங்கல் பண்டிகை, தைப்பூச திருவிழாவின்போதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த ஆண்டு வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave your comments here...