அமெரிக்க திரைப்பட விருது: ஆர்ஆர்ஆர் படத்துக்கு 3 விருதுகள்..!

சினிமா துளிகள்

அமெரிக்க திரைப்பட விருது: ஆர்ஆர்ஆர் படத்துக்கு 3 விருதுகள்..!

அமெரிக்க திரைப்பட விருது: ஆர்ஆர்ஆர் படத்துக்கு 3 விருதுகள்..!

தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலி, பாகுபலி 1,2 படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்கிய படம் தான் RRR. கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், அலியா பட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக உருவான இப்படம், இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் மாஸ் ஹிட் கொடுத்தது.

இந்தாண்டு வெளியான சிறந்த இந்திய படங்களில் இந்த படமும் சிறந்த படமாக விளங்கியுள்ளது. ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதா ராமராஜு, தொல்குடிகளின் போராளி கொமரம்பீம் போன்றோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் பல நாடுகளிலும் மொழிபெயர்த்து திரையிடப்பட்டது.

சுமார் 550 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 1,200 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது. விஜயேந்திர பிரசாத் எழுதிய இப்படத்திற்கு எம்.எம்.வீரமணி இசையமைத்துள்ளார். பல்வேறு விருதுகளை அள்ளிக்குவிக்கும் இப்படம் இந்தாண்டின் சிறந்த படங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. இதன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குநர் ராஜமெளலி, இதன் அடுத்த பாகம் விரைவில் உருவாகும் என சமீபத்தில் அறிவித்திருந்தார்.

ஹாலிவுட்டில் இந்த ஆண்டு ஏகப்பட்ட சர்வதேச விருதுகளை தட்டித் தூக்கும் குறிக்கோளுடன் பல விருது விழாக்களில் படத்தை களமிறக்கி உள்ளார் இயக்குநர் ராஜமெளலி. அந்த வகையில், நியூ யார்க், பீனிக்ஸ், லாஸ் வேகாஸ் உள்ளிட்ட பல திரைப்பட விழாவில் இப்படம் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.

இந்த நிலையில் தற்போது கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள பிலடெல்பியாவில் நடைபெற்ற திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இப்படமும் போட்டியிட்டது. அப்போது இந்த படம் 4 பிரிவுகளில் வெற்றி பெற்றது.அதாவது சிறந்த வெளிநாட்டு மொழிப்படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஸ்கோர்/ஒலிப்பதிவு என 3 பிரிவுகளில் இப்படம் முதலாவதாக இடம்பெற்று விருதுகளை வென்றுள்ளது. மேலும் பிலிப்ஸ் ஸ்டீக்ஸ் சீஸ்டீக் விருது (Philip’s Steaks Cheesesteak Award) பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. இதனால் திரை ரசிகர்கள் RRR படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave your comments here...