மார்கழி அமாவாசை – சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி..!

ஆன்மிகம்தமிழகம்

மார்கழி அமாவாசை – சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி..!

மார்கழி அமாவாசை – சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி..!

மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்தில் 8 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.

இதன்படி, நாளை (டிச. 21) மார்கழி பிரதோஷம், டிச. 23ம் தேதி அமாவாசையையொட்டி, நாளை முதல் வரும் 24ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மார்கழி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி, சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave your comments here...