பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவல்துறை சிறப்பாக பணியாற்ற வேண்டும்- பிரதமர் நரேந்திர மோடி

சமூக நலன்

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவல்துறை சிறப்பாக பணியாற்ற வேண்டும்- பிரதமர் நரேந்திர மோடி

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவல்துறை சிறப்பாக பணியாற்ற வேண்டும்- பிரதமர் நரேந்திர மோடி

மாநில காவல்துறை டிஜிபி-க்கள், ஐ.ஜி.க்கள் மாநாடு புனேவில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக புனே வந்த பிரதமர் மோடியை மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வரவேற்றனர்.

இந்நிலையில், காவல்துறை டிஜிபி-க்களின் முதல் நாள் மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் கலந்து கொண்ட பேசிய பிரதமர் நரேந்திர மோடி:- பெண்கள் மத்தியில் காவல்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவல்துறை சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

அனைத்து மாநில போலீசார், குறிப்பாக காஷ்மீர் மற்றும் உ.பி., போலீசார், மத்திய துணை ராணுவப்படை ஆகியன நாட்டை பாதுகாப்பை வைத்திருக்க பாடுபட வேண்டும்.காஷ்மீரில் 370 ரத்து செய்யப்பட்ட போதும், அயோத்தி தீர்ப்பு வெளியான போதும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் காத்தது போது, எப்போதும் பாதுகாப்பான நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றார். தெலங்கானா மற்றும் உன்னாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண்கள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், காவல்துறைக்கு பிரதமர் மோடி இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளார்.

பின்னர் முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா தலைவருமான அருண் ஷோரி மராட்டிய மாநிலம் லாவசாவில் வசித்துவருகிறார். 78 வயதாகும் அவர் கடந்த 1-ந் தேதி தனது பங்களா அருகில் நடைபயிற்சி சென்றபோது தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புனேயில் உள்ள ரூபி ஹால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், உள்ளே ரத்தக்கசிவும், வீக்கமும் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் புனே சென்ற பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 6 மணிக்கு அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று அருண் ஷோரியை சந்தித்தார். அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

Leave your comments here...