பொங்கல் பண்டிகை – அரசு விரைவு பேருந்துகளில் 15 ஆயிரம் பேர் முன்பதிவு..!

தமிழகம்

பொங்கல் பண்டிகை – அரசு விரைவு பேருந்துகளில் 15 ஆயிரம் பேர் முன்பதிவு..!

பொங்கல் பண்டிகை  – அரசு விரைவு பேருந்துகளில்  15 ஆயிரம் பேர் முன்பதிவு..!

பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட ஆண்டுதோறும் அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் வெளியூர் செல்வதற்கு வசதியாக 30 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதியும் நடைமுறையில் உள்ளது.

அதன்படி கடந்த 12-ந் தேதியில் இருந்து பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கியது. தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் இருந்து அரசு விரைவு பஸ்களுக்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி 13-ந்தேதி பயணம் செய்ய 10 ஆயிரம் பேரும், 12-ந்தேதிக்கு 4 ஆயிரம் பேரும், 14-ந்தேதிக்கு 1000 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 800 பஸ்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது.

சென்னையில் இருந்து புறப்படும் 300 பஸ்களில் தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் இடங்கள் நிரம்பி வருகின்றன. திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் கோவை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் பஸ்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:- ஜனவரி 13-ந்தேதி பயணம் செய்ய அதிகளவில் முன்பதிவு நடந்துள்ளது. பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் முன்பதிவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். முன்பதிவில் இணைக்கப்பட்டுள்ள விரைவு பஸ்கள் நிரம்பியவுடன் பிற போக்குவரத்து கழக பஸ்கள் இணைக்கப்படும். தீபாவளியை போல பொங்கலுக்கு பஸ் பயணம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணத்தை மேற்கொள்ள திட்டமிடுங்கள். பொங்கல் சிறப்பு பஸ்கள் வழக்கம்போல இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு அமைச்சர் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...