மகாராஷ்டிரா – சத்தீஸ்கர் இடையே வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

இந்தியா

மகாராஷ்டிரா – சத்தீஸ்கர் இடையே வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

மகாராஷ்டிரா – சத்தீஸ்கர் இடையே வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மற்றும் சத்தீஸ்கர் மாநில பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் மோடி நாக்பூர் ரயில்நிலைத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் . 2019ஆம் ஆண்டில் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வந்தே பாரத் ரயில் என்பது மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயில் ஆகும்.

பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்கு பின்னர் இந்த வந்தே பாரத் ரயில் திட்டம் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது. முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். டெல்லி முதல் வாரணாசி வரை மற்றும் டெல்லி முதல் கத்ரா வரை என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை முதல் குஜராத் மாநிலம் காந்திநகர் வரை செல்லும் 3ஆவது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, இமாச்சலப் பிரதேசம் மாநிலம் உனா மாவட்டம், அம்ப் அண்டவ்ரா ரயில் நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி 4ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும், தமிழ்நாட்டில் சென்னை – கர்நாடகா மாநிலம் மைசூரு இடையே இந்தியாவின் 5ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த நவம்பர் மாதம் 11ஆம் தேதியும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மற்றும் சத்தீஸ்கர் மாநில பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் மோடி நாக்பூர் ரயில்நிலைத்தில் இருந்து டிசம்பர் 11ஆம் தேதி (இன்று) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்நவிஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

முன்னதாக, வந்தே பாரத் விரைவு ரயில்கள் கால்நடைகளின் மீது மோதி அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கி அதன் சேவை பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்பதும், வந்தே பாரத் ரயில்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க ரூ.264 கோடியில் தடுப்பு வேலி அமைக்க மேற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...