மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி – கண்டு கொள்ளுமா மாவட்ட நிர்வாகம்..!

தமிழகம்

மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி – கண்டு கொள்ளுமா மாவட்ட நிர்வாகம்..!

மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி – கண்டு கொள்ளுமா மாவட்ட நிர்வாகம்..!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் இருந்து கச்சைகட்டி, மேட்டுப்பட்டி, சாத்தையாறு அனை வழியாக பாலமேடு செல்லும் பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆங்காங்கே ஆளை விழுங்கும் பள்ளங்களும், மழைக்காலங்களில் சேரும் சகதியுமாகவும் காணப்படுகின்றன. குறிப்பாக, சாத்தையார் அணைய ஒட்டிய மேற்பகுதிகள் மிகவும் மோசமான நிலையில் மேடு பள்ளங்கள் நிறைந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதனால், பாலமேடு வாடிப்பட்டி செல்லும் வாகனங்கள் அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும், மலைப் பகுதியாக உள்ளதால் இரவு நேரங்களில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. சாலையின் இரு புறங்களிலும் உள்ள மரங்களை வெட்ட வேண்டும். இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சாலையில் நடுவில் உள்ள மேடு பள்ளங்களை சீரமைக்க இப்பகுதி வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது சோழவந்தான் சட்டமன்ற தொகுதியாகும். திமுகவைச் சேர்ந்த வெங்கடேசன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆகவே, சட்டமன்ற உறுப்பினரும், இச்சாலையை பார்வையிட்டு, சாலையை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave your comments here...