நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது உறுதி – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்..!

இந்தியா

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது உறுதி – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்..!

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது உறுதி –  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்..!

பொது சிவில் சட்டத்தை கட்டாயம் நாடு முழுவதும் அமல்படுத்துவோம் என்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

பொதுசிவில் சட்டம் அமல்படுத்துவது என்பது மத்தியில் ஆளும் பாஜகவின் திட்டங்களில் ஒன்று என சொல்லப்படுகிறது. பாஜக தலைவ்ர்களும் அவ்வப்போது பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். மக்களவை தேர்தலின் போது பாஜக தனது தேர்தல் அறிக்கையிலும் பொது சிவில் சட்டம் நீக்கப்படும் என்று கூறியிருந்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து போன்றவற்றை பாஜக அரசு நிறைவேற்றி விட்டது.

இந்த நிலையில், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பொது சிவில் சட்டம் கட்டாயம் கொண்டு வரப்படும் என்று பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக அமித்ஷா கூறியதாவது:- பாரதிய ஜன சங்கம் காலத்தில் இருந்தே தேர்தல் வாக்குறுதியில் பொது சிவில் சட்டம் பற்றி பாஜ கூறி வருகிறது. அரசமைப்பு சபையும் தகுந்த நேரத்தில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

ஒரு மதசார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இருக்கக்கூடாது. தேசமும் நாடும் மதசார்பற்றது என்றால் மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் எப்படி இருக்கலாம். அரசமைப்பு சபையில் வழங்கப்பட்ட உறுதி மொழி காலப்போக்கில் மறக்கப்பட்டு விட்டது. பாஜவை தவிர வேறு எந்த கட்சியும் இதை ஆதரிக்கவில்லை. ஜனநாயகத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் தேவை.

இது குறித்து வெளிப்படையான ஆரோக்கியமான விவாதங்கள் நடத்த வேண்டும். உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், குஜராத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயக ரீதியான ஆலோசனைகள் முடிந்த பின்னர் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது’’ என தெரிவித்தார்.

சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் சோதனைகளை அரசியல் கண்னோட்டத்தில் அணுக கூடாது. இந்த சோதனைகளில் யாருக்காவது குறை தென்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அரசின் வெற்றியாகவே பார்க்கிறேன். இதை எனது தனிப்பட்ட வெற்றியாக பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...