மங்களூருவில் ஆட்டோவில் வெடித்த குக்கர் குண்டு – என்ஐஏக்கு மாறுகிறது வழக்கு.!

இந்தியா

மங்களூருவில் ஆட்டோவில் வெடித்த குக்கர் குண்டு – என்ஐஏக்கு மாறுகிறது வழக்கு.!

மங்களூருவில் ஆட்டோவில் வெடித்த குக்கர் குண்டு  – என்ஐஏக்கு மாறுகிறது வழக்கு.!

மங்களூரு ஆட்டோ வெடித்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்படும் என கர்நாடக ஏடிஜிபி தெரிவித்துள்ளார்.

மங்களூருவில் ஆட்டோ வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக கர்நாடக ஏடிஜிபி விளக்கம் அளித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏடிஜிபி, ஆட்டோவில் குண்டு வெடித்தது தொடர்பாக மைசூரில் 2 பேர், கோவையில் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்படும்.

ஆட்டோவில் பயணித்த ஷாரிக்கிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருக்கிறதா? என விசாரணை நடைபெற்று வருகிறது. மங்களூரு ஆட்டோ வெடித்த வழக்கில் காயமடைந்த ஷாரிக் ஏற்கனவே ஒரு வழக்கில் தேடப்பட்டவர். இரு வழக்குகளில் உபா சட்டம் போடப்பட்ட நிலையில் மேலும் ஒரு வழக்கில் தேடப்பட்டவர் ஷாரிக்என கர்நாடக ஏடிஜிபி விளக்கம் அளித்தார்.

இதனிடையே கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்த முபின் குறித்து விசாரிக்க மங்களூருவில் இருந்து தனிப்படை கோவை வருகை தந்துள்ளது. மங்களூரு குண்டு வெடிப்பில் காயமடைந்த ஷாரிக் கோவை, மதுரை, குமரி மற்றும் கேரளாவில் தங்கியிருந்துள்ளார். ஷாரிக் கோவை காந்திபுரத்தில் தங்கியிருந்த போது தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்தருடன் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் தங்கியிருந்தபோது யார், யாரையெல்லாம் சந்தித்தார் என்பது குறித்து தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்தரை மங்களூரு அழைத்துச் செல்ல தனிப்படை திட்டமிட்டுள்ளது.

மங்களூருவில் ஆட்டோவில் குண்டுவெடிப்பு நிகழ்த்தியது முகமத் ஷாரிக் என்பது உறுதியானது. ஷாரிக் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்த அடையாளத்தின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2020ல் லஷ்கர் இ தொய்பா ஆதரவு வாசகங்களை எழுதியதற்காக ஷாரிக் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Leave your comments here...