ரேஷன் அரிசி மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் – கடத்தினால், கடும் நடவடிக்கை: மதுரை எஸ்‌.பி எச்சரிக்கை.!

உள்ளூர் செய்திகள்தமிழகம்

ரேஷன் அரிசி மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் – கடத்தினால், கடும் நடவடிக்கை: மதுரை எஸ்‌.பி எச்சரிக்கை.!

ரேஷன் அரிசி மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் – கடத்தினால், கடும் நடவடிக்கை: மதுரை எஸ்‌.பி எச்சரிக்கை.!

ரேசன் அரிசி பதுக்கல், மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருத்தால் கடைக்குசீல் வைக்கப்படும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா உட்பட்ட கூத்தியார்குண்டு பகுதியில் சட்டவிரோதமான புகையிலை பொருள்கள் விற்பனை செய்வது மற்றும் ரேஷன் அரிசிகள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில், ஆஸ்டின்பட்டி போலீசார் தீவிர ரோந்து மற்றும் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ,கூத்தியார்குண்டு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றில் சட்ட விரோதமாக 32 கிலோ 400 கிராம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் அவரது வீட்டில் சோதனை செய்தபோது 6 டன் எடை கொண்ட ரேஷன் அரிசிகள் பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து , ரேஷன் அரிசி, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடையில் பணிபுரிந்த பாண்டியராஜன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் கடத்தலில் ஈடுபட்ட கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave your comments here...