மாநில அரசுகள் சம்மதித்தால் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர நாங்கள் ரெடி – பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி..!

இந்தியா

மாநில அரசுகள் சம்மதித்தால் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர நாங்கள் ரெடி – பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி..!

மாநில அரசுகள் சம்மதித்தால் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர நாங்கள் ரெடி – பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி..!

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது. ஆனால் அதற்கு மாநிலங்கள் சம்மதிக்க வேண்டும். மாநிலங்கள் சம்மதித்தால், அதை செய்ய தயாராக இருக்கிறோம் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி கூறியுள்ளார்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படுமா? என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு ஹர்தீப்சிங் பூரி கூறியதாவது:- பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது. ஆனால் அதற்கு மாநிலங்கள் சம்மதிக்க வேண்டும். மாநிலங்கள் சம்மதித்தால், அதை செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால், மாநிலங்கள் சம்மதிக்க வாய்ப்பில்லை. இதை புரிந்து கொள்வது ஒன்றும் கஷ்டம் இல்லை. மதுபானம், எரிபொருட்கள் ஆகியவற்றில் இருந்து மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது.

நல்ல வருவாய் கிடைக்கிறது என்றால், அதை யாரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். பணவீக்கம் பற்றி மத்திய அரசு மட்டுமே கவலைப்படுகிறது. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி கடைசியாக லக்னோவில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்குமாறு கேரள ஐகோர்ட்டு யோசனை தெரிவித்தது.

ஆனால், அந்த மாநில நிதி அமைச்சர் ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த ஓராண்டில் பெட்ரோலிய பொருட்கள் விலை குறைவாக உயர்த்தப்பட்டது இந்தியாவில்தான். வடஅமெரிக்காவில் ஓராண்டில் 43 சதவீதம் விலை உயர்த்தப்பட்டது. ஆனால், இந்தியாவில் வெறும் 2 சதவீதம் மட்டுமே அதிகரித்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்களை பாதிக்காத வகையில், உற்பத்தி வரியை குறைத்துள்ளோம். சில அண்டை நாடுகளில், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், விலையும் அதிகமாக உள்ளது. ஆனால், நமக்கு கிராமப்புற பகுதிகளில் கூட தட்டுப்பாடு இல்லை. மத்திய, மாநில அரசுகளின் போக்குவரத்து வசதிகளே இதற்கு காரணம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. விலையை சீராக வைத்திருப்பதற்கு முயன்று வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...