லிவ் இன் காதலியை 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து காதலன் அப்தப் அமீன் – உடல் பாகத்தை காட்டுப்பகுதியில் வீசிய பகீர் சம்பவம்!..!

இந்தியா

லிவ் இன் காதலியை 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து காதலன் அப்தப் அமீன் – உடல் பாகத்தை காட்டுப்பகுதியில் வீசிய பகீர் சம்பவம்!..!

லிவ் இன் காதலியை 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து  காதலன் அப்தப் அமீன் – உடல் பாகத்தை காட்டுப்பகுதியில் வீசிய பகீர் சம்பவம்!..!

புதுடில்லி: காதலித்து லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்தவர்களில் காதலி திருமணத்திற்கு வற்புறுத்தியதால் அவரை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்ததுடன், அருகில் உள்ள காட்டுப்பகுதியில் உடல் பாகங்களை வீசிய காதலனை போலீசார் கைது செய்தனர்.

26 வயதான ஷ்ரத்தா மும்மையில் உள்ள ஒரு மல்டிலெவல் நிறுவனத்தின் கால் சென்டரில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு அப்தப் அமீன் பூனாவாலா என்பவரை சந்தித்துள்ளார். இருவரும் நட்பாக பழகி பின்னர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு ஷரத்தாவின் பெற்றொர் சம்மதிக்காததால் வீட்டை விட்டு வெளியேறி அப்தப் அமீனுடன் டில்லியில் உள்ள மெஹ்ரவ்லியில் குடியேற்றி லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

அதன்பின்னர், ஷ்ரத்தா தன் குடும்பத்தினருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். கடந்த நவ.,8ல் ஷ்ரத்தாவை பார்ப்பதற்காக தந்தை விகாஸ் மதான் டில்லி வந்துள்ளார். ஆனால் அவரது வீடு பூட்டியிருக்கவே சந்தேகமடைந்த விகாஸ், மெஹ்ரவ்லி போலீஸில் புகார் அளித்தார். புகாரின்பேரில், கடந்த நவ.,12ம் தேதி பூனாவாலாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஷ்ரத்தாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர், பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

பூனாவாலா அளித்த வாக்குமூலம் தொடர்பாக போலீசார் தெரிவித்ததாவது: திருமணம் செய்யுமாறு ஷ்ரத்தா வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மே 18ம் தேதி ஷ்ரத்தாவை கொலை செய்த பூனாவாலா, உடலை 35 துண்டுகளாக வெட்டியுள்ளார்.
இதனை வைப்பதற்காக 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட குளிர்சாதனப்பெட்டியை வாங்கி, அதில் உடல் பாகங்களை அடுக்கி வைத்துள்ளார். அதன்பின்னர் 18 நாட்களாக ஒவ்வொரு நாளும் அதிகாலை 2 மணிக்கு சில உடல் பாகங்களை எடுத்து மெஹ்ரவ்லியில் உள்ள காட்டுப்பகுதியில் பல்வேறு இடங்களில் வீசியுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். வாக்குமூலத்தின் அடிப்படையில் காட்டுப்பகுதியில் போலீசார் உடல் பாகங்களை தேடி வருகின்றனர்.

Leave your comments here...