ஜி-20 மாநாடு : எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாட்கள் விதிக்கப்படுவதை ஜி20 நாடுகள் ஊக்குவிக்க கூடாது – பிரதமர் மோடி

இந்தியாஉலகம்

ஜி-20 மாநாடு : எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாட்கள் விதிக்கப்படுவதை ஜி20 நாடுகள் ஊக்குவிக்க கூடாது – பிரதமர் மோடி

ஜி-20 மாநாடு : எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாட்கள் விதிக்கப்படுவதை ஜி20 நாடுகள் ஊக்குவிக்க கூடாது – பிரதமர்  மோடி

இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி-20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று புறப்பட்டு பாலி நகருக்கு சென்றார். இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இதனை முன்னிட்டு அவரது 3 நாள் பயணத்திற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஜி-20 தலைவர்களுடன் வளர்ந்து வரும் உலகளாவிய வளர்ச்சி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச விவகாரங்கள் பற்றி விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படும். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, இதில் கலந்து கொள்ளும் பல நாட்டு தலைவர்களையும் நான் நேரில் சந்தித்து பேச உள்ளேன். இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிகள் பற்றி அவர்களுடன் மறுஆய்வு செய்யப்படும். இதன்பின், பாலியில் நடைபெற கூடிய வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூக மக்களிடையே உரையாற்ற இருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

ஜி-20 மாநாட்டின் நிறைவு நிகழ்வாக ஜி-20 அமைப்பின் தலைமைத்துவம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். இதனை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ளார். நமது நாட்டுக்கும் மற்றும் மக்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என பிரதமர் மோடி பாலிக்கு புறப்படும் முன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

இதனையடுத்து, ஜி-20 மாநாட்டு நடைபெறும் பாலி நகரில் உள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலுக்கு இன்று பிரதமர் மோடி வருகை தந்தார். அவரை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வரவேற்றார்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், கொரோனா பேரிடருக்கு பின் புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களில் உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும். உலகின் வேகமான பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முக்கியமானது என்றார். எரிசக்தி விநியோகத்தில் தடையை ஊக்குவிக்க கூடாது, எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மை அவசியம் என்றார். பசுமையான எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது என்றார். உக்ரைனை இயல்பு நிலைக்கு திருப்புவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும்.

கடந்த நூற்றாண்டில் இரண்டாம் உலகப்போர் பேரழிவை ஏற்படுத்தியது. 2ம் உலகப்போருக்கு பின் தலைவர்கள் அமைதிப்பாதைக்கு திரும்ப தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஓவ்வொரு நாட்டிலும் ஏழைக் குடிமக்களுக்கான சவால் மிகவும் கடுமையானது. அன்றாட வாழ்வே அவர்களுக்கு ஒரு போராட்டமாக இருக்கிறது. எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாட்கள் விதிக்கப்படுவதை ஜி20 நாடுகள் ஊக்குவிக்க கூடாது. எரிபொருள் சந்தையில் நிலைத்தன்மை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave your comments here...