மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் தொல்லை – கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை..!

தமிழகம்

மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் தொல்லை – கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை..!

மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் தொல்லை – கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை..!

மதுரை மாநகராட்சி பகுதிகளில், பல தெருக்களில் நாய்கள் தொல்லை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மதுரையில், அண்ணாநகர், யாகப்பா நகர் வண்டியூர், கோமதிபுரம், புதூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்ணா நகர் தாசில்தார் நகர் பகுதிகளில், தெருவில் சுற்றி தெரியும் நாய்கள் அப் பகுதியில் செல்வோரை விரட்டி அச்சுறுத்துகிறது. மேலும், இரு சக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டி கால்களை கவுக்கிறதாம்.

இதனால் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. மதுரை கோமதிபுரம், தாசில்தார் நகர் வீரவாஞ்சி தெரு, ஜூபிலி டவுன் பகுதிகளில் ,தாழைவீதி குருநாதன் தெரு ஆகிய பகுதிகளில், சாலையின் நடுவே நாய்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறது.

இதனால், பொதுமக்கள் நடமாட அஞ்சுகின்றனர். மற்றும் மதுரை அண்ணா நகர் மல்லிகை குடியிருப்பு பகுதிகளிலும் இரவு நேரங்களில் நாய்கள் அவ்வழியே செய்யும் செல்வோரை விரட்டுகிறதாம். இதையெல்லாம் கட்டுப்படுத்த ,மதுரை மாநகராட்சி அதிகாரிகள் நாய்களைப் பிடித்து அப்பகுதி மக்களை அச்சுறுத்தலை போக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave your comments here...