மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடி வருகையொட்டி உச்சகட்ட பாதுகாப்பு..!

தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடி வருகையொட்டி உச்சகட்ட பாதுகாப்பு..!

மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடி வருகையொட்டி உச்சகட்ட பாதுகாப்பு..!

பிரதமர் மோடி, திண்டுக்கல் காந்திகிராம பல்கலைகழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க மதுரை வருவதல் மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டண்ட் உமா மகேஸ்வரன் தலைமையில், விமான நிலைய ஒடுபாதையை, கண்காணிப்பு கோபுரம், அதி விரைவு அதிரடிப்படை, விமான நிலைப உள் வளாகம் ஆகியவை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும் மதுரை விமான நிலைய வெளி வாளகத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ,போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் காவல் துணை ஆணையர் ஆறுமுகசாமி, உதவி ஆணையர் திருமலை குமார் தலைமையில் 50 போலீஸார் விமான நிலையம், சோதனை சாவடி, பெருங்குடி, ரிங்ரோடு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

பிரதமர் மோடி வருகை ஒட்டி, பாதுகாப்பு நலன் கிடைக்கும் பயணிகளுடன் வரும் பார்வையாளர்கள் விமான நிலைய வெளிவழகத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்கள் விமான நிலைய வளாகத்திற்குள் மூன்று நாட்களுக்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெடிகுண்டு தடுப்பு போலீஸார் மற்றும் மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு விமான நிலைய வளாகம் முழுவதும் தீவிரமாக கண்காணிக் கப்படுகிறது. விமான நிலையத்தில் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிப் படுகிறது. மேலும், மத்திய சிறப்பு பாதுகாப்பு படை ஏஐஜி ஜிதேந்திரா சிங் பாக்ஸி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் விமான நிலைய இயக்குநர் அலுவலகத்தில் 2வது நாளாக நடைபெறுகிறது.

Leave your comments here...