தொற்று நோய்தடுப்புக்கான தனிமைப்படுத்துதலுக்கு பின் 2 சிறுத்தை புலிகள் வன பகுதியில் விடுவிப்பு..!

இந்தியா

தொற்று நோய்தடுப்புக்கான தனிமைப்படுத்துதலுக்கு பின் 2 சிறுத்தை புலிகள் வன பகுதியில் விடுவிப்பு..!

தொற்று நோய்தடுப்புக்கான தனிமைப்படுத்துதலுக்கு பின் 2 சிறுத்தை புலிகள் வன பகுதியில் விடுவிப்பு..!

இந்தியாவில், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ‘சீட்டா’ ரக சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952-ம் ஆண்டு அரசு அறிவித்தது. அதேநேரம் அவற்றை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி 8 சீட்டா ரக சிறுத்தைகளை இந்தியாவுக்கு நமீபியா வழங்கியது. 5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் அடங்கிய இந்த குழு, விமானம் மூலம் நமீபியாவில் இருந்து கடந்த செப்டம்பர் 17-ந்தேதி காலையில் டெல்லி கொண்டு வரப்பட்டன.

அதன்பின் ஹெலிகாப்டரில் மத்திய பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த 8 சிறுத்தைகளை பிரதமர் மோடி தனது பிறந்த நாளான செப்டம்பர் 17-ந்தேதி பூங்காவில் விட்டார். எனினும், தொற்று நோய்தடுப்புக்கான தனிமைப்படுத்துதல் வளையத்திற்குள்ளேயே அவை உலாவி வந்தன.

இந்த நிலையில், 2 ஆண் சீட்டாக்கள் தொற்று நோய்தடுப்புக்கான தனிமைப்படுத்துதலுக்கு பின் ஆரோக்கியமுடன் உள்ள சூழலில், குணோ வாழ்விட பகுதியில் விடுவிக்கப்பட்டு உள்ளன.


இதுபற்றி, பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், 2 சிறுத்தை புலிகள் தனிமைப்படுத்துதலுக்கு பின் குணோ வாழ்விட பகுதியில் விடுவிக்கப்பட்டு உள்ளன. மற்ற சீட்டாக்களும் விரைவில் வெளிவிடப்படும். இந்த சீட்டாக்கள் அனைத்தும் ஆரோக்கியமுடன், சுறுசுறுப்புடன் மற்றும் வாழ்விடத்திற்கு ஏற்ற சூழலுடன் நன்றாக உள்ளது என அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்து உள்ளார். இந்த 2 சீட்டாக்களையும், மத்திய சுற்று சூழல், வன மற்றும் பருவகால மாற்ற அமைச்சகம் ஆனது, மத்திய விலங்குகள் நல அமைச்சகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழை பெற்ற பின்னர் வனத்தில் விடுவிக்கும் நிகழ்ச்சி நடந்து உள்ளது.

Leave your comments here...