சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் – ரயில்வே போலீசார் விசாரணை..!

தமிழகம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் – ரயில்வே போலீசார் விசாரணை..!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் – ரயில்வே போலீசார் விசாரணை..!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் இன்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் படியாக இருந்த இரண்டு வாலிபர்களை அழைத்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த ரயில்வே போலீசார் அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அதில், ரூ.75 லட்சம் ரொக்க பணம் இருந்து உள்ளது. இந்த பணம் குறித்து அவர்கள் உரிய விளக்கம் மற்றும் ஆவணங்கள் இல்லாததால் அவற்றை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரின் சோதனையில் ரூ.75 லட்சம் சிக்கி உள்ளது. பணத்தை வைத்திருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்து. மேலும், இவர்கள் பூக்கடை மின்ட் தெருவில் உள்ள நகைக்கடையில் பணத்தை கொடுக்க வந்ததும் தெரியவந்ததுள்ளது. இவர்கள் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை வருமானவரித்துறையிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Leave your comments here...