10 ஆண்டு கால அதிமுகவின் ஆட்சியில் சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டையேசீரழித்துவிட்டார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகம்

10 ஆண்டு கால அதிமுகவின் ஆட்சியில் சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டையேசீரழித்துவிட்டார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

10 ஆண்டு கால அதிமுகவின் ஆட்சியில் சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டையேசீரழித்துவிட்டார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி தொடங்கியது. பருவமழையின் முதல் மழைப்பொழிவு நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, வட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

இந்தநிலையில், சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மழை மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வடகிழக்கு பருவமழை தொடர்பாக வரும் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது சென்னை, எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வந்த வீடியோ கால் அழைப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை எழிலகத்தில் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- வட சென்னையில் தண்ணீர் தேங்கி இருப்பதாக புகார் வந்திருக்கிறது. தொடர்ந்து அதனை அப்புறப்படுத்தி வருகிறோம்.

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சென்னையை மட்டுமல்லாது தமிழகத்தையை அதிமுகவினர் சீரழித்துள்ளனர். அனைத்தையும் சரி செய்ய வேண்டுமென்றால் பல ஆண்டுகள் ஆகும். ஆனால் நாங்கள் ஒன்றரை வருடங்களுக்குள்ளேயே முடித்துவிடுவோம் என நம்பிக்கையுள்ளது என்றார்.

Leave your comments here...