பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

இந்தியா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களில் தீவிரவாதி களின் எண்ணிக்கையும், செயல்பாடு களும் அதிகரித்துள்ளதால், அவர்கள் இந்தியாவில் ஊடுருவும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நிதி நடவடிக்கை குழுவின் கண்காணிப்பு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் சமீபத்தில் நீக்கப் பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம்களில் தீவிரவாதிகளின் எண்ணிக்கையும், செயல்பாடுகளும் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது போன்ற தீவரவாத அமைப்புகள், இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அதிகம் ஊடுருவ வைக்க திட்டமிட்டு வருகின்றனர். பனிப் பொழிவுக்கு முன்பாக 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகளின் முகாம்கள் அனைத்தும் எல்லைக்கு அருகே மாற்றப்பட்டுள்ளன. எல்லையை ஒட்டியுள்ள வீடுகள் தீவிரவாத முகாம்களாக பயன்படுத்தப்படுகின்றன.

இந்திய பகுதிக்குள் ஊடுருவ புதிய வழிகளை காணும் நடவடிக்கைகளிலும் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் தீவிரமாக செயல்படுகின்றன. 20-க்கும் மேற்பட்ட முகாம்களில், தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு தேவையான உதவிகளை பாகிஸ் தான் ராணுவமும், உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐ.யும் அளித்து வருகின்றன.

ஜம்மு காஷ்மீரின் எல்லையை ஒட்டியுள்ள மசில், கெரன் மற்றும் குரேஸ் ஆகிய பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்களுக்கு 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் வந்துள்ளனர். இதனால் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப் பொழிவு நிலவும் நேரத்திலும் எல்லையில் விழிப்புடன் ரோந்து பணியை மேற்கொள்ள பாதுகாப்பு படையினருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...