36 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாயும் GSLV-மார்க்-3 ராக்கெட்..!

இந்தியா

36 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாயும் GSLV-மார்க்-3 ராக்கெட்..!

36 செயற்கைக் கோள்களுடன் இன்று  விண்ணில் பாயும் GSLV-மார்க்-3 ராக்கெட்..!

இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் இன்று இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.

ஶ்ரீஹரிகோட்டவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, சரியாக இன்று நள்ளிரவு 12:07 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 24 மணி நேர கவுண்டவுன் இன்று சனிக்கிழமை 00:07 (நேற்று நள்ளிரவு 12:07) மணிக்கு தொடங்கியது. இதுவே இங்கிலாந்தின் 36 செயற்கை கோள்களை கொண்டு பயணிக்கும் முதல் GSLV ராக்கெட்டாகும். இதற்காக நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்துடன் இஸ்ரோ, இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. வணிக ரீதியான ராக்கெட் ஏவுதலில் 36 செயற்கைக்கோள்களை கொண்டு இஸ்ரோ பயணிப்பது இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகிறது.

இதுவரை 345 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. வணிக ரீதியாக ராக்கெட் ஏவுதலில், சந்தையில் இன்னொரு அடியை எடுத்து வைத்துள்ளது இந்தியா. இதுவரை இஸ்ரோ செலுத்திய ராக்கெட்டுகளை விட, வணிக ரீதியிலான பயன்பாட்டில் இங்கிலாந்துடன் ஒப்பந்தம் போடபட்டு பயணிக்கும் முதல் அதிக எடை கொண்ட ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது GSLV M3.

மேலும், ‘GSLV மார்க் 3 ரக ராக்கெட்டால் 10 டன் எடைவரை சுமந்து செல்ல இயலும். இந்தமுறை இங்கிலாந்தின் ஒன் வெப் நிறுவனத்தில் 36 செயற்கை கோள்களை எடுத்து செல்கிறது GSLV M3. இந்த 36 செயற்கைகோள்களின் எடையும் 6 டன் (5,796 kl) இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 6 டன் எடையுள்ள இந்த 36 பேலட் செயற்கைகோள்களை 601 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புவியின் குறுகிய சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 36 செயற்கை கோள்களையும் புவியின் சுற்றுப் பாதையில் வைக்க, இந்திய ராக்கெட் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இதுவரை வணிக பயன்பாட்டிற்காக இஸ்ரோ PSLV ரக ராக்கெட்டுகளை தான் பயன்படுத்தி வந்தது, அதன் எடை சுமார் 1.7 டன் மட்டுமே. ஆனால் இந்தமுறை வணிக பயன்பாட்டிற்காக GSLV மார்க் 3 ரக ராக்கெட்டை 6 டன் எடையுடன் பயன்படுத்துகிறது இஸ்ரோ.

முதல் முறையாக 36 செயற்கைகோள்களை கொண்டு பயணிக்கும் GSLV மார்க் 3 ரக ராக்கெட் என்பதால் குறிப்பிட்ட சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளது இஸ்ரோ. சரியான இடத்தில் 36 செயற்கைகோள்களையும் ஒவ்வொன்றாக பிரிக்கும் நிகழ்வு மிக முக்கிய சவாலாக பார்க்கப்படுகிறது. விண்வெளியில் C25 நிலையில் அடுத்தகட்டம் மற்றும் வேகக் கூட்டல் மூலம் பாதுகாப்பான பிரிப்புக்கான தூரத்தை உறுதி செய்யவேண்டும்.

மேலும், ‘முழு நிகழ்விற்கும் ஒவ்வொரு நிலையிலும் தரவுகள் (data) சரியான முறையில் கிடைக்க பெறுவது மற்றும் இதனை தாங்கி செல்லும் பேலோடு அடாப்டர் மற்றும் இணைப்பு வளையத்தை அந்த உணர்ந்து செயற்கைக்கோள்களை செலுத்துவது உள்ளிட்டவற்றை முறையாக பின்பற்றுவதே அந்த சவால்களாகும்.

Leave your comments here...