முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை விசாரணை அமைப்பு கலைப்பு.!

இந்தியா

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை விசாரணை அமைப்பு கலைப்பு.!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை விசாரணை அமைப்பு கலைப்பு.!

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் நடந்த சதி திட்டம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட, எம்.டி.எம்.ஏ., எனப்படும், பல்துறை கண்காணிப்பு அமைப்பை கலைத்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ல் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுாரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது விடுதலைப் புலிகள் அமைப்பு நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட எம்.சி.ஜெயின் விசாரணைக் குழு, பல்துறை கண்காணிப்பு அமைப்பை உருவாக்க பரிந்துரை செய்திருந்தது. இதன்படி, சி.பி.ஐ., உட்பட பல்வேறு விசாரணை அமைப்புகள் இடம்பெற்ற, பல்துறை கண்காணிப்பு அமைப்பு, 1998ல் அமைக்கப்பட்டது. முதலில் இரண்டாண்டு காலத்துக்கு அமைக்கப்பட்ட இந்த அமைப்பு, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

ராஜிவ் கொலையில் உள்ள சதி திட்டம் தொடர்பாக இலங்கை, பிரிட்டன், மலேஷியா உட்பட பல நாடுகளில் இருந்து தகவல் கேட்டு, இந்த அமைப்பின் சார்பில், 24 கடிதங்கள் எழுதப்பட்டன. அதில் பெரும்பாலானவற்றுக்கு பதில் கிடைத்துள்ளது.அமைப்பு உருவாக்கப்பட்டு, 24 ஆண்டுகளுக்குப் பிறகும், ராஜிவ் கொலைக்கான சதி குறித்து குறிப்பிடும்படியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

இதையடுத்து, இந்த அமைப்பை கலைத்து மத்திய அரசு கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அமைப்பு நடத்தி வந்த விசாரணையை, சி.பி.ஐ.,யின் ஒரு பிரிவே கவனிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...