கட்டாய மதமாற்றம்: கர்ப்பிணி மனைவி சித்ரவதை – சின்னத்திரை நடிகர் அர்னவிற்கு 15 நாள் நீதிமன்ற காவல்- சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.!

சினிமா துளிகள்

கட்டாய மதமாற்றம்: கர்ப்பிணி மனைவி சித்ரவதை – சின்னத்திரை நடிகர் அர்னவிற்கு 15 நாள் நீதிமன்ற காவல்- சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.!

கட்டாய மதமாற்றம்: கர்ப்பிணி மனைவி  சித்ரவதை – சின்னத்திரை நடிகர் அர்னவிற்கு 15 நாள் நீதிமன்ற காவல்- சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.!

கர்ப்பிணி மனைவியான சின்னத்திரை நடிகை திவ்யாவை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்த புகாரில் சின்னத் திரை நடிகர் நைனா முகமது என்கிற அர்ணவ் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தொலைக்காட்சித் தொடரில் நடித்து வரும் சின்னத் திரை நடிகர் அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே நடிகை திவ்யா திடீரென வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் கணவரான நடிகர் அர்ணவ் கர்ப்பிணியாகிய தம்மை துன்புறுத்துகிறார்; கட்டாய மதமாற்றம் செய்தார் என பல்வேறு புகார்களை கண்ணீரும் கம்பலையுமாக தெரிவித்திருந்தார். நடிகர் அர்ணவ் சித்ரவதை செய்து அடித்து உதைத்ததால் தன் வயிற்றில் இருக்கும் கரு கலையும் நிலையில் இருக்கிறது எனவும் கதறி இருந்தார் திவ்யா.

இதற்கிடையில் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது போரூர் அனைத்து மகளிர் போலீசார், அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நடிகர் அர்னவ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். அர்னவுக்கு போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பினர்.

ஆனால் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் 18ஆம் தேதி ஆஜராவதாக அர்னவ் வக்கீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், போரூர் உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் பூந்தமல்லி அருகே உள்ள நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் அர்னவ்வை கைது செய்து மாங்காடு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப் பட்டார். அவரை வரும் 28ந் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நடிகர் அர்னவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave your comments here...