4வது வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

இந்தியா

4வது வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

4வது வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி இமாசல பிரதேச மாநிலத்திற்கு இன்று வருகைதந்துள்ளார். இமாச்சலப்பிரதேசம் – உனா மாவட்டத்தில் 4வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அம்ப் அந்தவுரா ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ரயில் இயக்கம் – 5 மணி 20 நிமிடங்களில் 412 கி.மீ. தூரத்தை இந்த ரயில் சென்றடையும். மிகவும் இலகுவான, அதிநவீன வசதிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்டது.


வந்தே பாரத் ரயில் சேவை நிகழ்வில் இமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்பின் பிரதமர் மோடி பொது கூட்டத்தில் கலந்து கொண்டு கூடியிருந்த மக்கள் முன் உரையாற்றினார்.


அவர் பேசும்போது, இமாச்சல பிரதேசம் மற்றும் உனாவுக்கு தீபாவளி பண்டிகை முன்னரே வந்து விட்டது. நான் இன்று புதிய வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளேன். நாட்டில் அறிமுகம் செய்யப்படும் 4-வது வந்தே பாரத் ரயில் இதுவாகும். கிராமப்புற சாலைவழி மேம்பாடு, அனைவருக்கும் குடிநீர் வினியோகம் கிடைக்க செய்தல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பில் முன்னேற்றத்துடன் கூடிய சுகாதாரநலன் சார்ந்த வசதிகள் ஆகியவை அரசின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த விசயங்கள் ஆகும். புதிய இந்தியாவானது, கடந்த கால சவால்களை மேற்கொண்டு கடந்து, விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Leave your comments here...