ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்..!

சமூக நலன்

ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்..!

ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்..!

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் தேசிய விருதுகளை செவிலியர் பணியாளர்களுக்கு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் புதுதில்லியில் நேற்று வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர்:- தரமான குறைந்த செலவிலான மருத்துவப் பராமரிப்பை அளிப்பதிலும், பல்வேறு சுகாதார சவால்களை எதிர்கொள்வதிலும், தனிநபர், குடும்பத்தினர், சமுதாயத்தினர் சுகாதாரத் தேவைகளுக்கு சேவை அளிப்பதிலும் செவிலியர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர் என்று கூறினார்.  தற்போதைய நிலையில் உலகத்துக்கு மென்மேலும் பராமரிப்பும், இரக்கமும் தேவைப்படுகின்றன என்றும் சேவை, நோய் பராமரிப்பு, கருணை ஆகியவற்றின் உருவமாக செவிலியர்கள் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.  நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களைப் பொறுத்தவரை, செவிலியர்கள்தான் ஒட்டுமொத்த மருத்துவப் பராமரிப்பின் முகப்பாக உள்ளனர் என்றார் அவர்.  2020 ஆம் ஆண்டு செவிலியர்கள் மற்றும் மகப்பேறு ஊழியர்கள் ஆண்டாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இன்று நம்மிடையே அதிக எண்ணிக்கையில் மூத்த குடிமக்கள் உள்ளனர் என்றும், அவர்களுக்கு சரியான வயது முதிர்வு பராமரிப்பு அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.  இந்தியாவில் வயது முதிர்ந்தோரை குடும்ப உறுப்பினர்கள் பராமரிக்கின்றனர்.  எனினும், வாழ்க்கை முறை மாறிவரும் சூழலில் முதியோருக்கு தொழில் ரீதியான பராமரிப்பு வழங்குவது அதிகரித்து வருகிறது என்றார்.  இத்தகைய பராமரிப்பு வழங்குவோர், பயிற்சி பெற்ற செவிலியர்களாக இருக்க வேண்டியது அவசியமில்லை. என்றாலும், வயது முதிர்ந்தவர்களின் பராமரிப்புப் பற்றிய அடிப்படைப் பயிற்சி இருந்தால் நல்லது என்று அவர் கூறினார்.

இத்தகையவர்களுக்கு குறுகிய கால பயிற்சித் திட்டங்களை வழங்க, நமது செவிலியர் பயிற்சி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

Leave your comments here...