ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் உயிருக்கு பயங்கரவாதிகள் குறி – மத்திய உளவுத்துறை எச்சரிக்கை.!
- October 3, 2022
- jananesan
- : 360
- RSS
தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளின் உயிருக்கு பயங்கரவாதிகள் குறி வைத்து இருப்பதாக, மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்பான செய்திகள் தான் தலைப்பு செய்திகளாக இடம்பிடித்து வந்தன. ரெய்டு, கைது நடவடிக்கைகள், வழக்குப்பதிவு, 5 ஆண்டுகளுக்கு தடை என்ற அடுத்தடுத்து அதிரடிகள் அரங்கேறின. மறுபுறம் பல்வேறு நகரங்களில் ஆர்.எஸ்.எஸ், பாஜக நிர்வாகிகளை குறிவைத்து நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் பதற்றத்தை கூட்டின. இந்த விஷயம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஐந்து, கேரளாவில் நான்கு என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முக்கிய நிர்வாகிகளின் உயிருக்கு, பயங்கரவாதிகள் குறி வைத்து இருப்பதாக, மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவர்களுக்கு, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கவும் முடிவு செய்துள்ளது. அந்த ஒன்பது பேரின் பெயர் உள்ளிட்ட விபரங்களை, மாநில அரசுக்கு அனுப்பி வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, தமிழகம் மற்றும் கேரளாவில், சம்பந்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., முக்கிய நிர்வாகிகள் போலீஸ் பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளனர். தமிழகத்தில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நவம்பர் 6ல் பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அதன் முக்கிய நிர்வாகிகளுக்கு மிரட்டல் வந்திருப்பது, போலீசாரை உஷாராக இருக்கச் செய்துள்ளது.
Leave your comments here...