மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீடு முகாம்..!

தமிழகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீடு முகாம்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு  செயற்கை உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீடு முகாம்..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், செயற்கை உறுப்புகள் மதிப்பீடு முகாம் நடைபெற்றது.

இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகம் (ALIMCO), இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடி மக்களுக்கு தேவையான செயற்கை உறுப்புகள் மற்றும் உபகரணங்கள் அவர்களது தேவை மற்றும் தகுதியின் அடிப்படையில் வழங்குவதற்காக, மாவட்டம் முழுவதும் மதிப்பீடு முகாம்களை நடத்தி வருகிறது.

வட்டார அளவில் நடைபெறும் இந்த மதிப்பீடு முகாம், சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பயனாளர்கள் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அசல் மற்றும் நகல் Passport size புகைப்படம் 5, வருமானச் சான்று உள்ளிட்ட ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இதன் மூலம் தகுதியானவர்களுக்கு மூன்று சக்கர வாகனம், நடைக்குச்சி, காதொலி கருவி, கண் கண்ணாடிகள், செயற்கை கை, கால்கள், போன்ற உபகரணங்களும் வழங்கப்பட உள்ளது. முகாம் ஏற்பாடுகளை மாவட்ட சுகாதாரத்துறை, சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Leave your comments here...