இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் 5 ஜி தொழில்நுட்பம் – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.!

இந்தியா

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் 5 ஜி தொழில்நுட்பம் – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.!

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் 5 ஜி தொழில்நுட்பம் – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.!

அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மொபைல் காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின்போது பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் இணைப்பை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில், ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சியான இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைக்க உள்ளார், என மத்திய அரசாங்கத்தின் தேசிய பிராட்பேண்ட் மிஷன் தெரிவித்துள்ளது.

5ஜி சேவையைப் பொறுத்தவரையில் அலைவரிசை ஏலம் அனைத்தும் முடிந்து விட்டன. பெரும்பாலான அலைவரிசையை வாங்கிய ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ஏர்டெல் இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும், குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை கொண்டு வருவதற்கு முழுமுயற்சியில் ஜியோ நிறுவனம் களம் இறங்கியுள்ளது. வரும் தீபாவளி முதல் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

5ஜி தொழில்நுட்பம் இந்தியாவுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது 2023- 2040 காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்திற்கு ரூ.36.4 டிரில்லியன் அளவுக்கு பயனளிக்கும் என்று உலகளாவிய தொழில்துறை அமைப்பு மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...