பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த இளம்பெண் – கொலை செய்த பாஜக பிரமுகர் மகனின் விடுதி நள்ளிரவில் இடிப்பு..!

இந்தியா

பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த இளம்பெண் – கொலை செய்த பாஜக பிரமுகர் மகனின் விடுதி நள்ளிரவில் இடிப்பு..!

பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த இளம்பெண் – கொலை செய்த பாஜக பிரமுகர் மகனின் விடுதி நள்ளிரவில் இடிப்பு..!

உத்தரகாண்ட் மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா. இவர் அம்மாநில அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார். வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யா.

அம்மாநிலத்தின் பவ்ரி ஹர்க்வல் மாவட்டம் ரிஷிகேஷ் அருகே புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமான சொகுசு விடுதி உள்ளது. ‘வனந்த்ரா’ என்ற அந்த சொகுசு விடுதியில் பணியாற்றி வந்த 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற இளம்பெண் கடந்த 18-ம் தேதி பணி முடிந்தும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அங்கிதாவின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளரான புல்கிட் ஆர்யா போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கடந்த 22-ம் தேதி வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன இளம்பெண் அங்கிதாவை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த விசாரணையின் போது இளம் பெண் வரவேற்பாளர் அங்கிதாவை விடுதி உரிமையாளரான புல்கிட் ஆர்யாவே கொலை செய்தது தெரியவந்தது. அங்கிதாவை விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் தள்ளி புல்கிட் ஆர்யா கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு சொகுசு விடுதியில் பணியாற்றும் மேலும் 2 ஊழியர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அங்கிதாவை கால்வாயில் தள்ளி கொலை செய்த புல்கிட் ஆர்யா உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அங்கிதாவின் உடல் கால்வாயில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்ததால் அங்கிதாவை விடுதி உரிமையாளர் புல்கிட் கொலை செய்து கால்வாயில் வீசியது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் வீதியில் போராட்டம் நடத்திய நிலையில், பாஜக பிரமுகர் மகன் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் காவல்துறை விசாரணை செய்ய மறுப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. விவகாரம் பூதாகரமான நிலையில் ரிசார்ட் முதலாளியான புல்கித் ஆர்யா, மேலாளர் சவுரப் பாஸ்கர் மற்றும் உதவி மேலாளர் அங்கித் குப்தா ஆகிய மூவரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் புஷ்கர் தாமி உத்தரவிட்ட நிலையில், ரிசார்டை புல்டோசர் வைத்து இடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோட்வார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave your comments here...