மும்பை-ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டம் – கடலுக்கு அடியில் 7 கி.மீ. சுரங்கப்பாைத..!

இந்தியா

மும்பை-ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டம் – கடலுக்கு அடியில் 7 கி.மீ. சுரங்கப்பாைத..!

மும்பை-ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டம்  – கடலுக்கு அடியில் 7 கி.மீ. சுரங்கப்பாைத..!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கும், குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கும் இடையே புல்லட் ரயில் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மராட்டியத்தில் முந்தைய சிவசேனா ஆட்சியின்போது, நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சுணக்கத்தால் முட்டுக்கட்டை நிலவியது. ஆட்சி மாறிய பிறகு, இத்திட்டம் வேகம் எடுத்துள்ளது.

பூமிக்கு அடியில் அமைய உள்ள மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் ரயில் நிலையத்துக்கும், தானே மாவட்டம் ஷில்பாடா ரயில் நிலையத்துக்கும் இடையே 21 கி.மீ. தூரத்துக்கு சுரங்க ரயில் பாதை அமைக்க வேண்டி உள்ளது. இதில், தானே கழிமுக பகுதியில் 7 கி.மீ. தூர பாதை, கடலுக்கு அடியில் அமைய உள்ளது.

நாட்டின் முதலாவது கடலுக்கு அடியிலான சுரங்கப்பாதை இதுவே ஆகும். இந்த பணிக்காக தேசிய அதிவேக ரயில் கழகம், புதிதாக டெண்டர் கோரியுள்ளது. ஏற்கனவே பலதடவை விடப்பட்ட டெண்டர்கள் கைவிடப்பட்ட நிலையில், இந்த டெண்டர் விடப்பட்டுள்ளது.

Leave your comments here...