பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையம் வரை வருகிறது மெட்ரோ ரயில் திட்டம்..!

உள்ளூர் செய்திகள்

பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையம் வரை வருகிறது மெட்ரோ ரயில் திட்டம்..!

பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையம்  வரை வருகிறது மெட்ரோ ரயில்  திட்டம்..!

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில்களை இயக்க, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் முதற்கட்ட திட்டம் 54.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையும், சென்டரல் முதல் பரங்கிமலை வரைக்கும் இரு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது.2ம் கட்ட திட்டப் பணிகள், 69,180 கோடி ரூபாய் மதிப்பில், 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 2வது கட்ட நீட்டிப்பு திட்டத்துக்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.

அதன்படி கேளம்பாக்கத்தில் இருந்து மாம்பாக்கம், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரைக்கும், பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலும், திருமங்கலம் முதல் ஆவடி வரைக்கும் வழித்தடத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மண் பரிசோதனை செய்து முடித்த பிறகு மெட்ரோ ரயில் நிர்வாகம் அடுத்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave your comments here...