ரூ.11 லட்சம் செலவில் ஆண்டாள் கோயில் யானைக்கு புதிய நீச்சல் குளம்..!

ஆன்மிகம்

ரூ.11 லட்சம் செலவில் ஆண்டாள் கோயில் யானைக்கு புதிய நீச்சல் குளம்..!

ரூ.11 லட்சம் செலவில் ஆண்டாள் கோயில் யானைக்கு  புதிய நீச்சல் குளம்..!

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானைக்கு ரூ.11 லட்சம் செலவில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், யானை குஷியாக குளித்து மகிழ்கிறது.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஜெயமால்யதா என்னும் 19 வயது யானை உள்ளது. இது குளித்து மகிழ ரூ.11 லட்சம் செலவில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளத்தில் யானை ஜெயமால்யதா தினசரி குளித்து மகிழ்கிறது. குளத்தில் யானை இறங்கியவுடன் அங்கும், இங்கும் ஆர்வமாக செல்கிறது.

யானை பாகன்கள் கூறுகையில், ‘‘புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் யானை தினசரி குளித்து மகிழ்கிறது. குளத்தில் இறங்கியவுடன் சிறு குழந்தை போல அங்கும், இங்கும் சென்று தண்ணீரை துதிக்கையால் வாரி இரைத்து மகிழ்ச்சியுடன் விளையாடுகிறது’’ என்றனர்.

Leave your comments here...