ரயிலில் வராத பயணிகள் காலியான பெர்த் தகவலை உடனுக்குடன் தரும் கருவி அறிமுகம்..!

இந்தியா

ரயிலில் வராத பயணிகள் காலியான பெர்த் தகவலை உடனுக்குடன் தரும் கருவி அறிமுகம்..!

ரயிலில் வராத பயணிகள் காலியான பெர்த் தகவலை உடனுக்குடன் தரும் கருவி அறிமுகம்..!

ரயில் பயணத்தின் போதே காலியாக உள்ள பெர்த்துகள் குறித்த தகவலை வழங்கும் புதிய கையடக்க எச்எச்டி கருவியை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம், காத்திருப்பு மற்றும் ஆர்ஏசி பயணச்சீட்டு வைத்துள்ள 7,000 பயணிகள் பெர்த் பெற்று பலனடைந்து வருகின்றனர். ரயிலில் முன்பதிவு செய்த பயணச் சீட்டை வைத்துள்ள பயணிகள் கடைசி நிமிடத்தில் வரவில்லை அல்லது பயணத்தை ரத்து செய்தால், காலியான அவர்களின் பெர்த்தை உடனுக்குடன் காட்டக் கூடிய எச்எச்டி எனும் புதிய கருவியை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 4 மாதமாக இக்கருவி, நீண்ட தூர பயண ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஐ-பேட் போன்ற கையடக்கமான இக்கருவி மூலம், ஆர்ஏசி மற்றும் காத்திருப்பு பயணச்சீட்டை வைத்துள்ள பயணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் காலி பெர்த்களை வழங்க முடிவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புள்ளி விவரங்களின்படி, கடந்த 4 மாதத்தில் 1,390 ரயில்களின் டிடிஇ.கள் 10,745 எச்எச்டி கருவிகளை கொண்டு செல்கின்றனர். இவர்கள் சராசரியாக தினமும் 5,448 ஆர்ஏசி பயணிகளுக்கும், 2,759 காத்திருப்புப் பயணிகளுக்கும் எச்எச்டி கருவி உதவியுடன் காலி பெர்த்களை ஒதுக்கி உள்ளனர். இக்கருவியின் மூலம் ஆர்ஏசி, காத்திருப்பு பயணிகளுக்கு வெளிப்படைத்தன்மையுடன் காலி பெர்த்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது. மேலும், அபராதத்திற்கான ரசீதுகளையும் எச்எச்டி கருவி மூலமே வழங்கும் வசதியும் விரைவில் செய்யப்பட உள்ளது.

Leave your comments here...