7 வயது சிறுவன் வைத்த கோரிக்கை – மேம்பாலம் கட்ட மத்திய ரயில்வே அமைச்சர் உத்தரவு..!

இந்தியா

7 வயது சிறுவன் வைத்த கோரிக்கை – மேம்பாலம் கட்ட மத்திய ரயில்வே அமைச்சர் உத்தரவு..!

7 வயது சிறுவன் வைத்த  கோரிக்கை – மேம்பாலம் கட்ட மத்திய ரயில்வே அமைச்சர் உத்தரவு..!

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன்தினம் ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்துக்குச் சென்றார். அப்போது புரி மாவட்டம் பிராபிரதாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் பத்ரி பிரசாத் பாண்டா, மத்திய அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை மனுவைக் கொடுத்தார்.

அதில், ‘‘எங்களது ஊரில் ரயில் பாதையை கடக்க முன்பு ரயில்வே லெவல் கிராசிங் இருந்தது. பின்னர் கிராமத்தில் கீழ் பாலம் (ஆர்யுபி) அமைக்கப்பட்டு உள்ள தால் லெவல் கிராசிங் மூடப்பட்டுவிட்டது. ஆனால், அந்த கீழ் பாலம் கிராமத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி இருக்கிறது. இதனால் கிராம மக்களும் மாணவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே கிராம எல்லையை ஒட்டி ரயில்வே நடை மேம்பாலம் அமைக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தான்.

இதைத் தொடர்ந்து ரயில்வே அதிகாரிகளை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவழைத்து உடனடியாக கிராம எல்லையையொட்டி ரயில்வே நடை மேம்பாலத்தை (ஆர்ஓபி) அமைக்க உத்தரவிட்டார். விரைவில் கிராம மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், சிறுவன் பத்ரியை பாராட்டினார்.

Leave your comments here...