திமுக எம்.பி. ராஜாவின் பேச்சு முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தையும் விமர்சிப்பதாக உள்ளது – அர்ஜுன் சம்பத்

அரசியல்

திமுக எம்.பி. ராஜாவின் பேச்சு முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தையும் விமர்சிப்பதாக உள்ளது – அர்ஜுன் சம்பத்

திமுக எம்.பி. ராஜாவின் பேச்சு முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தையும் விமர்சிப்பதாக உள்ளது – அர்ஜுன் சம்பத்

திமுக எம்பி ராஜாவின் பேச்சு, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தையும் விமர்சிப்பதாக உள்ளது, என, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

அன்னுாரில் நிருபர்களிடம் இவர் கூறியதாவது: சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், எம்.பி., ராஜா, ஹிந்துக்கள் குறித்து இழிவாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின், ‘எங்கள் கட்சியில் ஒரு கோடி இந்துக்கள் உள்ளனர். நாங்கள் ஹிந்து விரோதிகள் அல்ல. எங்களை சிலர் ஹிந்து விரோதிகள் என தவறாக சித்தரிக்கின்றனர்’ என்று கூறியிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தியுள்ளார். முதல்வரின் மருமகன் சபரீசன், திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தியுள்ளார். ராஜாவின் பேச்சு, முதல்வர் குடும்பத்தையும் விமர்சிப்பதாக உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்துக்களின் மத உணர்வை புண்படுத்திய ராஜாவை கண்டித்து, இந்து மக்கள் மக்கள் கட்சி சார்பில், போலீசில் புகார் அளித்து, ஜனநாயக முறையில் அறப்போராட்டம் நடத்தப்படும். பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்த மாதத்தை, தமிழகத்தில் சமூக நீதி நிலை நாட்டிய மாதமாக கொண்டாட உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Leave your comments here...