திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் யானை நலமாக உள்ளது : வதந்திகளை நம்ப வேண்டாம் – கோவில் நிர்வாகம் தகவல்..!

தமிழகம்

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் யானை நலமாக உள்ளது : வதந்திகளை நம்ப வேண்டாம் – கோவில் நிர்வாகம் தகவல்..!

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் யானை நலமாக உள்ளது : வதந்திகளை நம்ப வேண்டாம் – கோவில் நிர்வாகம் தகவல்..!

திருவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் யானையை பாகன்கள் தாக்கியதால் காயம் ஏற்பட்டதாகவும், அதனை சரி செய்வதற்காக அசாம் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் வரும் செய்திகள் வதந்தி என்று கோவில் நிர்வாகம் தகவல்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 2011ம் ஆண்டு, அசாம் மாநிலத்திலிருந்து 7 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்த யானைக்கு ஜெயமால்யதா என்று பெயர் வைக்கப்பட்டு, கோவிலில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீஆண்டாள் கோவிலின் முக்கிய நிகழ்ச்சிகளில், கோவில் யானை ஜெயமால்யதா முன்னிலையில் இருக்கும்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம், தேக்கம்பட்டியில் நடந்த யானைகள் புத்துணர்வு முகாமில், ஜெயமால்யதா யானையை அதன் பாகன்கள் கடுமையாக தாக்கியதாக வீடியோ வெளியானது. இதனையடுத்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, யானை பாகன் ராஜாவை பணியிடை நீக்கம் செய்தது. வனத்துறை கொடுத்த புகாரின் பேரில் யானை பாகன் ராஜா கைது செய்யப்பட்டார். தற்போது புதிய யானை பாகன்கள் நியமிக்கப்பட்டு, ஸ்ரீஆண்டாள் கோவில் அருகேயுள்ள, கிருஷ்ணன் கோவில் பகுதியில் பிரத்யேகமாக அறை அமைக்கப்பட்டு, அனைத்து வசதிகளுடன் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவில் யானை தாக்கப்படுவதாக மீண்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனையடுத்து தமிழக வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர், ஸ்ரீஆண்டாள் கோவில் யானையை பரிசோதனை செய்தனர்.

இதில் யானைக்கு எந்தவிதமான காயமும் இல்லை, யானை நலமாக உள்ளது என்று மருத்துக்குழு, தமிழக அரசுக்கு அறிக்கை வழங்கியது. இதனையடுத்து ஸ்ரீஆண்டாள் கோவில் யானை மீண்டும் அசாம் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

– மதுரை ரவிசந்திரன்

Leave your comments here...