கன்னியாகுமரியில் வசந்த் &கோ நிறுவனத்தின் 106வது கிளை திறப்பு விழா..!

தமிழகம்

கன்னியாகுமரியில் வசந்த் &கோ நிறுவனத்தின் 106வது கிளை திறப்பு விழா..!

கன்னியாகுமரியில் வசந்த் &கோ நிறுவனத்தின் 106வது கிளை திறப்பு விழா..!

வசந்த்&அன் கோவின் 106 வது கிளை திறப்பு விழா, கன்னியாகுமரியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

வசந்த் &கோ என்றாலே, சிரித்த முகத்தோடு தோன்றும் அதன் உரிமையாளர் வசந்தகுமார் அண்ணாச்சியின் முகம் தான் அனைவருக்கும் ஞாபகத்தில் வந்து செல்லும். மளிகைக் கடை முதல் மக்களவை வரை, தன்னுடைய அயராது மாபெரும் உழைப்பாள் அனைவர் உள்ளங்களிலும், எல்லா இடங்களிலும் உயர்ந்து நின்றவர் வசந்தகுமார் அண்ணாச்சி.

அவர் தான், வசந்த் &கோ வின் அடையாள சின்னம். அவர் மறைந்தாலும், வசந்தகுமாரின் சிரிப்பு மட்டும் எல்லோர் மனங்களிலும் மறையாமல் அப்படியே இருக்கிறது.அப்படியான புன்னகை மன்னன் வசந்தகுமார் கட்டி எழுப்பிய “வசந்த் &கோ” சாம்ராஜ்யம், இன்றும் கொடிகட்டிப் பறக்கிறது. அதன் வெளிப்பாடாக, தற்போது மேலும் ஒரு புதிய கிளையைத் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேருந்து நிலையம் முன்பு பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது.

வசந்த &கோ-வின் 106 வது கிளையை, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தமிழ்ச் செல்வி வசந்த குமார், ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி, புதிய கிளைகளைத் தொடங்கி வைத்தார். வசந்தகுமார் அவர்களின் மகனும் தற்போதைய கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் அவர்கள் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் அவர்களும் குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர்.

மேலும் வசந்த&கோ நாகர்கோவில் நிறுவனத்தின் மேலாளர் திரு அசோக் குமார்,குமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்,வசந்த் & கோ நிறுவன ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Tharnesh -H

Leave your comments here...