மோசமான நிலையில் இருக்கும் நித்தியானந்தா – இலங்கையில் மருத்துவ தஞ்சம் கோரி அதிபருக்கு கடிதம்..!

இந்தியா

மோசமான நிலையில் இருக்கும் நித்தியானந்தா – இலங்கையில் மருத்துவ தஞ்சம் கோரி அதிபருக்கு கடிதம்..!

மோசமான நிலையில் இருக்கும் நித்தியானந்தா – இலங்கையில் மருத்துவ தஞ்சம் கோரி அதிபருக்கு கடிதம்..!

நித்தியானந்தா, தனது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் இலங்கையில் மருத்துவ தஞ்சம் கோரியும் இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பி சென்றார். அவர் கைலாசா தீவில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவர் தரப்பில் இருந்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், அவரது உடல் நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால், அவசர மருத்துவ சிகிச்சை வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் வசிக்கும் கைலாசா தீவில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை எனவும் இலங்கையில் அதற்கான மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கைலாசா தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் என குறிப்பிடப்படும் நித்தியபிரேமாத்மா ஆனந்த சுவாமி, அதிபர் ரணிலிக்கு இந்த கடிதத்தை எழுதியுள்ளார், அதில் நித்தியானந்தாவிற்கு என்ன பிரச்னை என்பதை கைலாசாவில் உள்ள மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அதற்கான மருத்துவ வசதிகள் கைலாசாவில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நித்தியானந்தா உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு அரசியல் மற்றும் மருத்துவ புகலிடம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். சில சக்திகளால் நித்தியின் உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும் அவரின் பாதுகாப்பை உறுதி செய்ய கைலாசாவில் இருந்து வெளியேறுவதே சிறந்ததாக இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் நித்தியின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான முழு செலவையும் கைலாசா அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் இலங்கை உடனான ராஜாங்கரீதியான உறவை ஏற்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு நன்றிக்கடனாக லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் நித்திக்கு அரசியல் புகலிடம் வழங்கிவிட்டால், இலங்கைக்கு தேவையான முதலீட்டையும் வழங்க முன்வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த கடிதம் பெறப்பட்டதாக உறுதி செய்த இலங்கை அரசு அதிகாரிகள் இது குறித்து இலங்கை அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

Leave your comments here...